பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308

கல்வி உளவியல் கோட்பாடுகள்



மாறும் கூறுகளெல்லாவற்றையும் நம்மால் கட்டுப்படுத்த முடியுமா என்று பார்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக, எளிய குடும்பத்திலிருந்து வரும் பிள்ளைகள் ஊட்டக் குறைவால் வாடுவதுடன் அறிதிறனிலும் உடல்வளமுள்ள பிள்ளைகளி னின்றும் குறைந்தே காணப்படுகின்றனர். இதனால் ஊட்டக் குறைவு அறிவுக் குறைவுக்குக் காரணம் என்று முடிவு கட்டிவிட முடியாது. இக் குறைவு ஊட்டக் குறைவால் மாத்திரம் நிகழ்ந் திருக்கும் எனக் கூற முடியாது; குடிவழியின் காரணமாகவும், குடும்பச் சூழ்நிலையாலும் இஃது ஏற்பட்டிருக்கலாம்.

இதனைச் சரியாக ஆராய விரும்பியவர்கள் முதலில் பட்டினியால் வாடிய பல குழவிகளின் அறிதிறனை ஆராய்ந் தனர். பிறகு அவர்கட்கு நல்ல ஊட்ட உணவு அளித்து, அறிதிறன் வளர்ச்சி வேகம் அதிகரிக்கின்றதா என்று கவனித் தனர். அஃது அங்கனம் அதிகரிக்கவில்லை என்பது தெரிந்தது. உணவுக் குறையை நீக்குவதால், குழந்தை சுறுசுறுப்புத் தன்மையும் மலர்ச்சியும் உடல் வளமும் பெறலாம். ஆனால், அதன் மன வளமும் அறிதிறனும் பெருகா. -

தனியாள் வேற்றுமைகளும் அவற்றை அளத்தலும்

அநேகமாக எல்லா உளவியற் பண்புகளிலும் மக்கள் ஒவ்வொருவரும் பிறருடன் வேறுபடுகின்றனர். உண்மையில், நவீன உளவியல் இத்தனியாள் வேற்றுமைகளைப்பற்றியே அதிகம் உரைக்கின்றது. எல்லா உளவியற் சோதனைகளும் இவ்வேற்றுமைகளை அளப்பதற்காகவே எழுந்தவை. சிலர் கர்த்த மதியுடனுள்ளனர்; சிலர் பிறவி முட்டாள்களாகவும் இருக்கின்றனர். அன்றியும், பெரும்பாலோர் சராசரி அறிவு நிலையை அடைந்துள்ளனர் என்பதையும் நாம் காண் கின்றோம். எனவே, எல்லோரும் சமமென்பது உறுதி யாச்சு' என்பதனால் எல்லோரிடத்திலும் ஒரே அளவான, பண்புகளும் திறன்களும் அமைந்துள்ளள என்று கொள்ளக் கூடாது. ஆயின், இக்கவிஞர் கூற்றின் சரியான பொருள்தான் யாது? விடுதலை பெற்ற பிறகு மக்களாட்சியில் மக்களுள் பொருளாதார, அரசியல், சமூக நிலைமையில் எவ்வேற்றுமை களிருப்பினும் சட்டத்திற்கு முன்னே அவர்கள் யாவரும் சமம் என்பதே.

அறிதிறனைப்பற்றி மேலே கூறினோம் அறிதிறன் சவு

இன்னதென்பதும் நமக்குத் தெரியும். அறிதிறன் ஈவைக் கொண்டு மக்கட்டொகையை பின்கண்டவாறு பிரிப்பர்.