பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிதிறனும் தனியாள் வேற்றுமைகளும் 3 #3

தொடர்புபற்றிய ஆராய்ச்சியிலிருந்து தனி மனிதரின் திறன்கள் கொத்துகளாக அமைந்துள்ளன என்று அறியக் கிடக்கின்றது. தம்முள் ஒன்றோடொன்று தொடர்புற்று பிற தொகுதித் திறன்களோடு தொடர்பற்றுத் தோன்றுகின்ற திறத்தொகுதிகள் ஒரு கொத்தாகும். எடுத்துக்காட்டாக மொழித்திறன், கணிதத்திறன் போன்றவை பல்வேறு சிறு திறன்களடங்கிய கொத்துகளே. கணிதத் திறனும் அறிவியல் திறனும் ஒரளவு தொடர்புடையவை. கணிதத் திறனும் விளையாட்டுத் திறனும் தொடர்புள்ளனவாகக் கருதப்பெறுவதில்லை. இத் தகைய திறன்களின் கொத்துகளின் எண்ணிக்கை எத்துணை என்பது இன்னும் தெரியவில்லை.

தனிவேற்றுமைகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்பப் பள்ளி நிரலை அமைத்தல்

முற்காலத்தில் குழந்தை, பள்ளி வேலைத்திட்டத்திற்குத் தக்கவாறு தன்னைப் பொருத்திக் கொள்ள வேண்டியிருந்தது. ஆசிரியரும் பள்ளியும் முக்கியத்துவம் பெற்றிருந்தனர். இப்பொழுது கல்வி குழந்தையை நடுவாக வைத்து இயங்கு கின்றது. குழந்தைகளின் தேவைகளையுணர்ந்து அவர்கட்கும் அவர்களின் தனி வேற்றுமைகளுக்கும் ஏற்றவாறு ஆசிரியர் பள்ளியையும் பாடத்திட்டங்களையும் பயிற்றும் முறைகளையும் மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும் என்பது இக்காலக் கல்வி யின் நோக்கம். எல்லோரும் சமம் என எண்ணி கையாளப்பெறும் வகுப்புப் போதனை முறையில் இதற்குத் தக்க வாய்ப்புகள் இருக்க முடியாது. சராசரி மாணாக்கர்கள், முற்பாடான வர்கள், பிற்பாடானவர்கள் இவர்களுக் கேற்றவாறு கல்வி முறைகள் கையாளப்பெறுதல் வேண்டும்.

மக்களாட்சிக் கொள்கைப்படி மக்கள் யாவரும் சமமான வர்களே. ஆகையால் அரசினர் பொதுச் செலவில் ஒவ்வொரு வருக்கும் இலவசக் கல்வி அளித்தல் வேண்டும். அவரவர்கள் அறிதிறனுக்கேற்றவாறு கல்வி வகைகளையும் பெறுவதற்கு வாய்ப்புகளை நல்குதல் வேண்டும். -

மக்கள் பண்புகள் யாவற்றிலும் வேற்றுமை இருப்பதுபோல் கற்கும் ஆற்றலிலும் வேறுபாடுகள் காணப்பெறுகின்றன. ஒருவர் கல்வியால் நன்மை பெறக்கூடிய நிலைக்கு மேலாக அவருக்குக் கற்பிப்பது பயனற்றதாகும். அறிதிறன் கற்றலுக்குப் பேரெல்லை வகுக்கின்றது என்பது என்றும் நினைவில் இருத்தற்பாலது. மேல்நிலைக் கல்விக்கேற்ற மாணாக்கர்களைத் தேர்ந்தெடுப்பது

36. Gsmrš glassir-Clusters.