பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல்.9

9. உடல் நலமும் உடல்நல வியலும்

உடற் செயல்களும் உளச் செயல்களும் சூழ்நிலைக்குத் தக்கவாறு திருப்தியான முறையில் பொருத்தமுற்றால்தான் உடல் நலம்[1] செவ்வையாக இருப்பதற்கு அறிகுறி. உடல் நலம் என்பது உடலின் ஒரு நன்னிலை. அந்நிலையில் உடல் வன்மையும், மனத்திறனும் வாழ்க்கையில் மனநிறைவும் ஏற்படுகின்றது. உடல் நலத்தால் வாழ்க்கையின் பயன் கிட்டுகின்றது; அஃது ஆளுமையை வளர்த்துக் கவர்ச்சியைத் தருகின்றது; தனியாளின் திறனை வளர்த்து வீட்டிலும் வாழ்க்கைத் துறைகளிலும் வெற்றியுடன் செயலாற்றத் துணை செய்கின்றது.

உடல் நல வியல்[2] என்பது உடல்நலத்தைக் காத்து அதனை வளர்க்கும் ஓர் அறிவியல் துறை; வாழ்க்கைக் கலை. அவ்வியலில் உள்ள கருத்துகள் யாவும் அறிவியல் அடிப்படையிலமைந்திருப்பதால் அஃது அறிவியலின்பாற்படுகின்றது; இந்தக் கருத்துகளை அன்றாட வாழ்வில் திட்டமான முறையில் பயன்படுத்திச் செயல்திறன்களை வளர்ப்பதால் அது வாழ்க்கைக் கலையாகின்றது. உடல்நலவியலின் நோக்கம் வெறும் அறிவைப் புகட்டுவது மட்டுமன்று; அது தனியாளைச் சிறந்த வாழ்க்கை நடத்துவதற்குத் தேவையான செயலை மேற்கொள்ளப் பயிற்றலும் ஆகும். இதனால் தனியாள் வாழ்நாள் முழுவதும் சிறந்த உடல் நலத்துடன் திகழ முடிகின்றது.

உடலைப்பற்றி 'முடைக் குரம்பை, புழுப்பிண்டம்’ என்று இழித்துக் கூறும் நூல்களும் உள்ளன; உடலின் உண்மை நிலையை உணர்ந்த திருமூலர் என்ற யோகியர்,


  1. 1. உடல்நலம்-Health.
  2. உடல் நல வியல்-Hygiene