பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

324

கல்வி உளவியல் கோட்பாடுகள்



நுனியிலிருந்து மேல் நோக்கிப் பற்கூழ் அறை உள்ளது. அதில் நரம்புகளும் குருதிக் குழல்களும் அமைந்து கிடக்கின்றன. இவை. வேர் துணியின் வழியாக உள் நுழைகின்றன.

  தத்தினியைவிடப் பற்சிப்பி மிகவும் கெட்டியானது; எளிதில் உடையும் தன்மையுடையது. ஆயினும், அதற்கு அதிக நீளும் தன்மையும் உண்டு. தந்தினி தொடர்ந்து கரைந்து கொண்டேயுள்ளது. என்றாலும், குருதியிலுள்ள தந்தினியை உண்டாக்கும் உயிரணுக்கள் அக்குறையை நிரப்பிக்கொண்ேடயுள்ளன.     
                                                    
  பற்களின் தோற்றம்: குழந்தை பிறப்பதற்கு முன், கரு முதிர்ந்து ஆறாம் வாரத்திலேயே, பல் தோற்றத்திற்குரிய அறிகுறிகள் காணப்பெறுகின்றன. குழந்தை பிறக்கும்பொழுது 20 பற்களுக்குரிய அச்சு தாடையில் அமைந்து விடுகின்றது. குழந்தை பிறந்த ஆறாந் திங்களிலிருந்து இரண்டரையாண்டுகட்குள் அவை முளைத்து விடுகின்றன. அவை பால் பற்கள்?? என வழங்கப்பெறும். ஒவ்வொரு தாடையிலும் உள்ள பால் பற்களில் 4 வெட்டும் பற்கள் : 2 நாய்ப் பற்கள் அல்லது. கோரைப்பற்கள்'; 4 பின் கடைவாய்ப் பற்கள்?". பாற்பற். களின் மொத்த எண்ணிக்கை 20.  

குழந்தையின் ஏழாம் வயதிலிருந்து பன்னிரண்டாம் வயது முடிவதற்குள் இவை விழுந்து நிலைத்த பற்கள்' முளைத்து விடுகின்றன. 14 வயதிற்குள் மொத்தம் 28 பற்கள் இருக்கும். நான்கு ஞானப் பற்கள்: 25.ஆம் வயதிற்குள் தோன்றிவிடும். என்வே, ஒவ்வொரு தாடையிலும் நிலைத்த பற்களில் 4 வெட்டும் பற்கள்; 2 நாய்ப் பற்கள்; 4 முன் கடைவாய்ப் பற்கள் (பாற்பற்களில் இவை இல்லை); 6 பின்கடைவாய்ப் பற்கள். ஞானப் பற்கள், இறுதியில் குறிப்பிட்ட பின்கடைவாய்ப் பற் களில் அடங்கும்.

பற்களின் பாதுகாப்பு: பற்களுக்கு நோய் ஏற்படாது தடுத்தல் முதல்நிலை. ஒட்டிக்கொண்டிருக்கும் பாலாடை,

15, Lää.g. esop-Pulp cavity. 16. 5s5ğggöreou - Elasticity. 17. Liro is sit-Miłk teeth. 18. Galloth usiàsir-Incissors. 19. 3&m sogio Lisba, gir-Canine teeth. 20. பின்கடைவாய்ப் பற்கள்.Molars. 21. ¡¡goa) 335 l/josir-Permanent teeth. 22. 551&t's Lisbäär-Wisdom teeth.