பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடல் கலமும் உடல்கல வியலும் 3łs

உணவுத்துணுக்குகள் முதலியவற்றை நீக்குவதற்காகக் குழந்தை யின் பல்லையும் வாயையும் அடிக்கடி கழுவுவது பெற்றோரின் கடமையாகும். உணவு உண்டபின் வாயைக் கொப்புளிக்கும் பழிக்கத்தைச் சிறுவர்களிடம் அடிக்கடி வற்புறுத்த வேண்டும். உணவுத் துணுக்குகள் பல் இடுக்குகளில் ஒட்டிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ளவேண்டும், பாக்கு, முறுக்கு போன்ற கடினமான பொருள்களைக் கடித்தால் பற்சிப்பி சேதமடையும்; பற்சிப்பி மீண்டும் வளராது. சொர சொரப்பான பொருள் களைக் கொண்டு பல்லைத் தேய்த்தல் கூடாது. நல்ல பற் பசையைக்கொண்டு புருசால் பல் துலக்குதல் நன்று. நல்ல மணமுள்ள பற்பொடியும் ஏற்றது. கருவேல், வேப்பங்குச்சி களைக் கொண்டும் துலக்கலாம். பல் துலக்குவதைப்பற்றிக் கூறும், - -

வேலுக்குப் பல்லிறுகும் வேம்புக்குப் பல்துலங்கும் பூலுக்குப் போகம் பொலியுங்காண்- ஆலுக்குத் தண்டா மரையாளும் சாருவளே காயுருவிக் கண்டால் வசிகரமாங் காண். என்ற பழம் பாடல் இவண் சிந்தித்தற்குரியது. எவற்றைக் கொண்டு பல் துலக்கலாகாது என்பதைக் கூறும் ஒரு பழம் பாடலும் உண்டு. அது,

கல்லும் மணலும் கரியுடனே பாளைகளும் வல்லதொரு வைக்கோலும் வைத்துகிதம்-பல்லதனைத் தேய்த்திடுவார் ஆமாயின் சேராளே சீதேவி வாய்த்திடுவள் மூதேவி வந்து.' சொத்தைப் பல்: சொத்தைப் பல் பிற்கால வாழ்க்கையில் உடல் நோய்கள் பலவற்றிற்கும் காரணமாகின்றது. பாற் பற்களில் சொத்தை ஏற்படுவது நிலைப்பல் சொத்தையைப் போல் அவ்வளவு அபாயமானதன்று. ஆனால், இந்நிலை ஏற் பட்டால் நிலைப்பற்கள் தோன்றியதும் அவை பாதிக்கப் பெறலாம்.

சொத்தைப் பற்கள் உண்டாவதற்கு நான்கு காரணங்கள் கூறப்பெறுகின்றன: (i) நாம் உண்ணும் உணவிலுள்ள சருக்கரைப் பொருள்களும் மாப் பொருள்களும் பற்களின் மேலும் அவற்றினிடையிலும் மெல்லிய திரைபோல் படிகின்றன. இந்தத் திரையின்மீது முக்கியமாக இரவில், பாக்டீரியா தோன்றி வளர்ந்து அமிலங்களை உண்டாக்குகின்றன. இந்த அமிலங்கள் பற்சிப்பியைத் தாக்கி, அவற்றில் வெடிப்புகளை உண்டாக்கு

23. பதார்த்த குண சிந்தாமணி.செய்யுள் 1394, 1395.