பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

326

கல்வி உளவியல் கோட்பாடுகள்


கின்றன. இவ்வெடிப்புகளின் வழியே துண்கிருமிகள் நுழைந்து சொத்தையை உண்டாக்குகின்றன, (ii) சரியான முறைப்படி பல் துலக்கிப் பற்களைப் பாதுகாவாமை, (iii) குடிவழிநிலை, (iv) பல்லின் தவறான அமைப்பிலிருந்தே பல் சொத்தை தொடங்குவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பல்லில் தந்தினி என்ற கடினக் கால்சியப் பொருள் சரியாக உருவாக்கப் பெறுவதில்லை. இதற்குக் காரணம் உணவில் விட்டமின் D இன்மையாகும். ஆகவே, உணவின் வகையை இதற்கேற்ப மாற்ற வேண்டும்.

குழந்தை சிறிதாக இருக்கும்பொழுதே உணவுச்சீர் குறைவைக் கவனிக்கவேண்டும். தகுந்த அளவு பால் கொடுப்ப தாலும், மீன் எண்ணெய் கொடுப்பதாலும் இக்குறையைப் போக்கலாம்.

ஊட்டத் தேவைகள்

நம்முடைய வாழ்க்கை நலத்திற்கு வேண்டிய கூறுகளில் முக்கியமானது உணவு. உடலில் உணவுக்கு ஏற்படும் மாறுதல் களைப் பற்றி விளக்கும் துறையை ஊட்டம்[1] என வழங்குவர். அதில் உடலுக்கு ஊட்டம் கிடைக்க உண்டாகும் எல்லா மாறுதல்களும் அடங்கும். உணவு உட்கொள்வது, செரிப்பது, செரித்த உணவு உடலின் பல பாகங்களுக்குக் கிடைப்பது, கழிவுப்பொருள்கள் நீக்கப்பெறுவது ஆகிய பலவும் ஊட்டத்தில் இடம் பெறும். ஊட்டத்தினால்தான். உடலிலுள்ள ஒவ்வோரணுவின் கட்டமைப்பும் தொழில் வன்மையும் சிதையாமல் உள்ளன.

ஊட்டத்தில் மூன்று நிலைகள் உள்ளன. முதலாவது, உணவுப் பாதையில் நிகழ்வது; இரண்டாவது, உடலின் அணுக்களில் ஏற்படுவது; மூன்றாவது தோல், மூச்சுறுப்பு, சிறுநீரகம் முதலிய கழிவுறுப்புகளில் நிகழ்வது. ஊட்டம் தன் செயலைச் சரியாக நிறைவேற்றுவதற்கு இந்த மூன்று நிலைகளில் செயல்கள் சரியாக நடந்தால் மட்டிலும் போதாது. அதற்கு ஏற்ற உணவுச் சத்துகளும் அந்தந்த உறுப்புகளின் நலமும் அமைய வேண்டும்,

உணவு: உயிர் வாழ்வதற்கும் உடல் நலத்திற்கும் இன்றியமையாத பொருள் உணவு, உணவு உடலுக்கு வலிமையைத் தருவது. வளர்ச்சியளிப்பது; உறுப்புகள் சேதமுறாமல் பாதுகாப்பது; உடலின் பல பாகங்களைக் கட்டுவது; உடலின் மாறுதல்களைத் தாங்குவது; உடலின் கழிவுகளைச் சரிப்-


  1. ஊட்டம்-Nutrition.