பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328

கல்வி உளவியல் கோட்பாடுகள்


,

பொருளும் உள்ளன; கார்போஹைட்ரேட்டுகள் எளிதில் செரிமானம் ஆகக்கூடியவை. இவை யாவும் தாவர மூலங்களா தலின், மலிவானவை.

பிசிதங்கள்: இவை சிக்கலான சேர்க்கைகளாகும். இவற்றில் கரி, ஹைட்ரொஜென், நைட்ரஜன், ஆக்ஸிஜென் ஆகியவை அடங்கியுள்ளன. சில பிசிதங்களில் கந்தகமும், சிலவற்றில் பாஸ்வரமும் இருக்கின்றன. உடல் வளர்ச்சியும் உடலுறுப்புப் புத்தமைப்பும் பெரும்பாலும் பிசிதங்களாலேயே நடைபெறு கின்றன. பிசிதங்கள் உயிரின் உறைவிடமாகிய ஊன்பசைப் பொருளின்" முக்கிய பகுதிகளாக உள்ளன. கொழுப்புகளிலும் கார்போஹைட்ரேட்டுகளிலும் நைட்ரஜென் இன்மையால் அவை உடல் வளர்ச்சிக்கும் உடலுறுப்புப்புத்தமைப்புக்கும் பயன் படா. பிசிதங்களைப் பிரிக்கும்பொழுது அமினோ அமிலங்கள்? கிடைக்கின்றன; இவை கிட்டத்தட்ட இருபது வகைகள் உள்ளன. சில வளர்ச்சிக்கும் உயிர் வாழ்வதற்கும் அவசியம். இத்தகைய அமினோ அமிலங்களைக் கொண்ட பிசிதங்களை முதல் தரப் பிசிதங்கள் என்று வழங்குவர். அவை பால், முட்டை, இறைச்சி முதலிய உணவுகளில் உள்ளன. உயிர் வாழ்வதற்கு மட்டிலும் துணையாக நின்று வளர்ச்சிக்குப் பயன் படாத அமினோ அமிலங்களைக் கொண்ட பிகிதங்களை இரண்டாந்தரப் பிசிதங்கள் என்று கூறுவர். அவை பருப்பு களிலும், பயறுகளிலும் அதிகமாக உள்ளன. இதர பிசிதங்கள் மூன்றாந் தரமானவை. - -

கொழுப்புகள்: இவற்றிலும் கரி, ஹைட்ரொஜென், ஆக்ஸிஜென் என்ற மூன்று தனிப்பொருள்கள் உள்ளன. ஆயினும், கார்போஹைட்ரேட்டுகளில் இருக்கும் அளவுக்கு ஆக்ஸிஜென் இவற்றில் இல்லை. கொழுப்புகள் ஆற்றலைத் தருவதுடன் உடலின் வெப்பம் குறையாமலிருப்பதற்கும், மேனி வளமாக இருப்பதற்கும், உடலின் சில உறுப்புகள் பாதுகாப்பாக இருப் பதற்கும் துணையாக நிற்கின்றன. வெண்ணெய் போன்ற தாழ்ந்த உருகுவரை யைக் கொண்ட கொழுப்புகள் எளிதில் செரிமானம் ஆகக்கூடியவை; இறைச்சிபோன்ற உயர்ந்த உருகு

31. நைட்ரஜென்-Nitrogen. 32. *śāāb-Sulphur. 33. Limousug ib-Phosphorus. 34. asusirusogli GurrGsir-Protoplasm. 35. AußGsrir stôlaith-Amino acid. 36. *-(5éjarsog-Melting-point. -