பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடல்நலமும் உடல்நல வியலும்

331



ஆசை உண்டாகின்றது. அந்த வேலையையே மீண்டும் தொடர்ந்து செய்தால், தலைவிலி, உறுப்புகளில் வலி, உழைச்சல் முதலியவை ஏற்படுகின்றன. வரம்பிகந்த நிலையில் உடல் செயல்களும் உள்ளச் செயல்களும் மிகவும் குன்றிவிடுகின்றன; நம்மால் ஒன்றுமே செய்ய முடிவதில்லை.

களைப்பு இருவகைப்படும். ஒன்று, உடல் களைப்பு'. இது நீடித்த இயக்கத்தால் ஏற்படும் மாறுதல்களால் உண்டாகின்றது. நெடுநேரம் தட்டச்சுப் பொறியை' இயக்கி வேலை செய்தால் விரல் தசைகள் ஒரே வகையாக இயங்குகின்றன. இதனால் அவை களைப்படைகின்றன. இது தசைக் களைப்பு" எனப்படும். இரண்டு, மனக்களைப்பு. தொடர்ந்த மனவேலையின் பயனாக மூளையில் ஏற்படும் மாறுதல்களால் இஃது உண்டாகின்றது. நெடுநேரம் கணக்குப் பாடம் படித்தால் மனக் களைப்பு' உண்டாகும்.

சலிப்பு: சலிப்பு', களைப்பினின்றும் வேறுபட்டது. ஒரு வேலையைச் செய்ய ஆர்வமின்மையும் வெறுப்பும் உண்டாகும் நிலையே சலிப்பு என்பது. சலிப்பு களைப்புக்கு முன்னதாகத் தோன்றி அதனினும் விரைவாகப் பெருகுகின்றது. பலர் சலிப்பு வந்துற்றபோது தாம் களைத்து விட்டதாகக் கருதுகின்றனர். இது தவறு. ஒரு களைப்பு உணர்ச்சி தோன்றுகின்றதேயன்றி ஆற்றல் அழிந்துவிடுவதில்லை. கவர்ச்சியின்மையாலேயே நாம் சலிப்படைகின்றோம். தொழிலை மாற்றினால் சலிப்பு நீங்கும். செயலில் கவர்ச்சி உண்டாக்கிக் கொள்வதாலும் சலிப்பைத் தடுக்கலாம்.

காரணம்: களைப்பு பொதுவாக மிகுந்த சிரமமான வேலையைச் செய்வதாலும், அல்லது சாதாரண வேலையை நெடுநேரம் செய்வதாலும் உண்டாகும். இழையங்களில்" இரண்டு விதமான வளர்சிதை மாற்றச் செயல்கள் சதா நடை பெற்றுக்கோண்டேயுள்ளன. முதலாவது, நரம்புச் செயல் களிலும் தசை இயக்கங்களிலும் ஆற்றல் செலவழியும் பொழுது உயிரணுக்கள் தேய்ந்து சிதைவடைகின்றன. இரண்டாவதாக தேய்வுற்ற பகுதியைப் புதுப்பிக்க உடலணுப் புத்தமைப்பு நடை

44. o-l-fi scooruli-Bodily fatigue. 45. தட்டச்சுப் பொறி-Type.writer. 46. 560&ássocrinus-Muscular fatigue. 47, togréâcoordily-Mental fatigue. 48. & sói il-Boredom. 49. Qopulà-Tissue.