பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

334

கல்வி உளவியல் கோட்பாடுகள்



தில்லை யென்றும், அவர்கள் நாள் முழுவதும் விளையாடுகின்றனர் என்றும், குறையாத ஆற்றலை அவர்கள் பெற்றுள்ளனர் என்றும் நம்புகின்றனர். இது தவறு. குழந்தைகள், விரைவில் களைப்பெய்துகின்றனர். வயதுக் குறைவிற்கேற்ப இக்களைப்பு அதிகப்படுகின்றது. களைப்பை நீக்கும் முறைகளைக் கையாள்வது பள்ளிகளின் கடமையாகும்.

தொழில் அல்லது பாட மாற்றம், உடல் நிலையை மாற்றல்; சிறு விளையாட்டுகள், தீவிரமான சிறு உடற்பயிற்சிகள், நல்ல காற்று, முகங் கழுவுதல், நீர் பருகுதல், சுவையான சிறுகதைகள், விருப்பமான வேலை, இசை போன்றவற்றைச் சமயத்திற்குத் தக்கவாறு பயன்படுத்திக் களைப்பைப் போக்கலாம். பள்ளிப் பாடவேளைப்-பட்டியைத் தக்க முறையில் தயாரித்தலாலும் களைப்பை அகற்றலாம். ஆசிரியரின் உற்சாகமும் ஒரளவு மாணாக்கர்களின் களைப்பைப் போக்கும். இவற்றைத் தவிர, வேறு சில முறைகளும் உள. அவற்றையும் சிறிது கவனிப்போம்.

1. ஓய்வு : களைப்பைத் தடுப்பதற்கு ஒய்வு மிகவும் இன்றியமையாதது. களைப்பில் அரைகுறைத் தூக்கநிலை தென்பட்டால் தூக்கமும் ஒய்வும் அவசியம் என்பதைக் காட்டுகின்றது. தூக்கத்திலும் ஒய்விலும் புதிய உடலணுக்கள் அமைவதுடன், புதிய ஆற்றல் மீண்டும் கிடைக்கின்றது. உயிரி புத்துணர்ச்சியைப் பெறுகின்றது.

2. தொழில் மாற்றம் : உடலின் ஒரு பாகம் அதிகமாக் வேலை செய்தால், வேறொரு பாகத்திற்கு வேலை கொடுத்துக் களைப்படைந்த பாகத்திற்கு ஓய்வளிப்பது பயன் தரும். மனவேலையில் மூளையின் சில பகுதிகளே செயற்படுகின்றன. அப்பொழுது உடலுக்கு வேலை கொடுத்தால் மூளையின் வேறு மையங்கள் செயற்படும்; முதலில் செயற்பட்ட மையங்களும் ஒய்வு பெறும். காந்தியடிகள், ஸ்டாலின், சர்ச்சில் போன்ற பெரியார்கள் அதிகமாக மனவேலையில் கருத்தூன்றிச் செயற் பட்டதற்குக் காரணம், அவர்கள் மேற்கொண்ட பல்வேறு செயல்களடங்கிய வேலைத் திட்டமே, அதனால் அவர்கள் ஒன்றிலிருந்து பிறிதொன்றுக்கு மாறிக் கொள்வர்.

3. கவர்ச்சி : களைப்புக்கு மருந்துபோல் உதவுவது தீவிர்மான கவர்ச்சி. செயலாற்றுவதில் கவர்ச்சி சிறந்ததோர் இயக்க வன்மையாகும். நாம் மேற்கொள்ளும் வேலையில் கவர்ச்சியை உண்டாக்கிக் கொண்டால் மன ஊக்கம் மிகும்: களைப்பும் தடைப்படும். தேர்வுக் காலத்தில் வெற்றியின்மீது கவர்ச்சி கொண்டு மாணாக்கர்கள் இரவெல்லாம் கண் விழித்து,