பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உடல்நலமும் உடல்நல வியலும்

335



அளவுக்கு மீறிய வேலையைச் செய்வது இதற்கு ஓர் எடுத்துக் காட்டாகும்.

4. ஊட்ட உணவு: ஊட்ட உணவு எளிதில் களைப்பைத் தெளிவிக்கின்றது. பால், பழம், சருக்கரைப்பொருள் ஆகியவை சிறப்பாகப் பயன் தருபவைகள். தேயிலை, காஃபி, கொக்கோ ஆகியவை தற்காலிகமாகக் களைப்பைத் தள்ளி வைக்கின்றன. இன்றைய நாளில், சிறப்பாக திரு. நெ. து. சுந்தரவடிவேலு அவர்கள் கல்வித்துறை இயக்குநராக வந்த பிறகு பிள்ளைகட்கு நண்பகல் உணவு அளிப்பது குறிப்பிடத்தக்கதாகும். இன்று முதலமைச்சரின் சத்துணவுத் திட்டம் நடைமுறையிலுள்ளது. பலர் களைப்பை நீக்குவதற்காகவே அடிக்கடி சிறிதளவு உணவு கொள்கின்றனர்.

5. விரைந்து செயலாற்றுதல் : ஒரு வேலையை மெதுவாகச் செய்வதைவிட, விரைந்து செயலாற்றுதல் களைப்பினைக் குறைப்பதாகும். காரணம், விரைந்து செயலாற்றும் பொழுது தடங்கல்களையும் கவனச் சிதறல்களையும் நாம் அகற்றி வேலையிலும் நல்ல பொருத்தப்பாட்டை எய்துவிக்கின்றோம்.இதனால் நம் திறமைக்கு மிஞ்சிய வேலையை முடிக்க வேண்டுமென்று முனைதல் கூடாது.

6. நல்ல பழக்கங்கள் : நற்பழக்கங்களை அமைத்துக் கொண்டு வேலையை எளிதாகச் செய்து முடிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும். நாம் நெடுநாள் செய்து வந்த வேலையைக் களைப்பின்றி நீண்ட நேரம் செய்யலாம். ஆனால், பழகாத புதிய வேலையை மேற்கொள்ளும்பொழுது எளிதில் களைப்புறுகின்றோம்.

பொழுதுபோக்குக் கவர்ச்சிகள்

வாழ்க்கையைச் சரிவர நடத்த வேண்டுமாயின், நல்ல முறையில் ஆயத்தம் செய்யப் பெற்ற வேலைத்திட்டம் வேண்டும். அதில் வேலையால் உண்டாகும் களைப்பினைப் போக்கிக் கொள்ளப் பொழுதுபோக்கும் ஒய்வும் இடம் பெறுதல் வேண்டும். வேலையில் சில மணி நேரம் செலவிடுவது நாம் சமூகத்திற்குச் செய்ய வேண்டிய கடமை; நாம் உயிர் வாழ் பிராணியாதலால், சில மணி நேரம் தூக்கத்தில் செலவிட்டேயாக வேண்டும்; ஒய்வு நேரத்திலுள்ள சில மணி நேரங்களைத் தான் நம் விருப்பப்படிச் செலவிடலாம். இந்நேரத்தைச் செலவிடுவதற்கும் நம் உடல் நலத்திற்கும் நேரான தொடர்பு உண்டு. ஒய்வு நேரத்தைப் பெரும்பாலும் பொழுதுபோக்குக் கவர்ச்சிகளிலேயே செலவிடுதல் வேண்டும். நன்முறையில் இதனைச் செலவிடுவதற்கு நாம் நன்முறையில் ஈடு செய்து