பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

340

கல்வி உளவியல் கோட்பாடுகள்


பற்றிய அறிவை மறைபோல் இருக்கச்செய்வதால் பல இடை யூறுகள் விளைகின்றன.

தேவையன்று என்பார் கூறுவது: காதலூக்கம் மிக வலியது; அபாயகரமானது. இதைச் சிறுவர், சிறுமியர் அடக்கி வைப்பது நலம். பால்பற்றிய வினாக்கள் மூத்தோர்க்கே உரியவை. சிறுவர்கள் அவற்றை அறியின் அதிவிரைவில் காமக்கடலில் மூழ்கிப் பிஞ்சில் பழுக்க நேரிடும். பொதுக்கல்வி பெறுவதிலும் அவர்கள் ஊக்கத்தை இழந்துவிடுவர். ஆகவே, பால் கல்வி அறவே கூடாது என்பது.

முடிவு: இது மிகச் சிக்கலான பிரச்சினையே எனினும், அறவே ஒழித்துவிடுவதால் நாம் எதிர்பார்க்கும் பலனை எய்தி விடுவதில்லை. நாம் மறைத்தாலும் அவர்கட்குப் பால்பற்றிய தகவல்கள் எட்டா என்று சொல்வதற்கும் இல்லை. தவறான தகவல்களை அவர்களே பெற்றுப் பாழ்படுவதைவிட, சரியான தகவல்களை நாமே தரும் பொறுப்பை மேற்கொண்டு அவர்களை நன்னெறியில் உய்ப்பது நம் கடமை. காதலூக்கத்தை உயர்மடைமாற்றம் செய்து தன்முறையில் திருப்பலாம் என்று முன்னரே விளக்கியுள்ளோம்.

இந்த நூலாசிரியர் எழுதி வெளியிட்டுள்ள "இல்லற நெறி"[1] என்ற நூலை 12-வயதிற்கு மேற்பட்டுள்ள மகளிர் படிப்பது பெருநலம் பயக்கும். 18-வயதிற்கு மேற்பட்ட ஆண் பின்ளைகளும் படித்துப் பயன் பெறலாம்.


  1. தமிழ்ப் புத்தகாலயம் (சென்னை-600 005) வெளியீடு.