பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-10

இயல்பு பிறழ்ந்த நடத்தை

வாழ்க்கை என்பது சமூக, இயற்பியல் சூழ்நிலைகளின் மாற்றங்களுக்கேற்பவும் தணியாளின் உடல், மனநிலைகளின் மாற்றங்களுக்கேற்பவும், சதா மாறிக்கொண்டிருக்கும் இக்கூறு களின் உறவு முறைகளுக்கேற்பவும் நடைபெற்று வரும் தொடர்ந்த பொருத்தப்பாடு என்பதை நாம் அறிவோம். பொருத்தப்பாடு என்பது தொடர்ந்து நடைபெறுவது; அது மிகவும் சிக்கலானது. அது தனியாளின் ஆளுமையில் ஒரு தனித்த கூறினை மட்டிலும் பொறுத்ததன்று; அது தனியாளிடம் ஊடாடிக்கொண்டிருக்கும் பல்வேறு கூறுகளின் ஒழுங்குடாட் டைப் பொறுத்தது. ஒரே விதமான நிலைமைகளில் பல்வேறு தனியாட்கள் பல்வேறு விதமாகப் பொருத்தப்பாடடை கின்றனர்; விளைவில் பல்வேறு பொருத்தப்பாடுகள் வேறுபடு கின்றன. பலனற்ற முறைகளில் பொருத்தப்பா டடைவதை உளவியலார் பிறழ்வான பொருத்தப்பாடு' என்று வழங்குவர்; அங்கனம் அடைபவர்கள் பிறழ்வான பொருத்தபாடுடையவர்கள்' எனப்படுபவர். சமூகத்திற்கு ஒவ்வாத நடத்தையைப் பொது வாக இயல்பு பிறழ்ந்த தடத்தை' என்று வழங்குவர் உள வியலார்."

இவ்வுலகில் நமது மனப்பான்மையை அளவுகோலாகக் கொண்டு எல்லாச் செயல்களையும் அளத்தல் இயல்பு. நமது மனத்திற்கு ஒத்தவற்றை இயல்பானவை என்றும், ஒவ்வாத வற்றை இயல்பு பிறழ்ந்தவை என்றும் கூறுகின்றோம். இதன்

1. Rpg Armsar GutGSGLuTG-Mal-adjustment. 2. பிறழ்வான பொருத்தப்பாடுடையவர்கள்.The mal. - - - - adjusted.

3. g)uôJ Gpgjj£5 p;i- $æogi- Abnormal behaviour.