பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

344

கல்வி உளவியல் கோட்பாடுகள்


(ii) பாதுகாப்பு மிகுதி : பாதுகாப்பு மிகுதியாலும் குழந்தை களிடம் போராட்டங்கள் எழலாம். பாதுகாப்பில் இரண்டு வகையுண்டு. ஒன்றில் பெற்றோரது ஆதிக்கம்[1] மிக்கிருக்கும். இத்தகைய பெற்றோர்கள் குழந்தைகளைப் பொறுப்புகளை ஏற்கவும், கடமைகளைச் செய்யவும் வாய்ப்புக்களைத் தருவதில்லை. இவர்கள் குழந்தைக்குத் தேவையான எல்லாவற்றை பும் தாமே செய்து தருகின்றனர். மற்றொன்றில் பெற்றோரின் பணிதல்[2] மீதுார்ந்து நிற்கும். இத்தகைய பெற்றோர்கள் குழந்தையை மனம்போல் நடக்க விடுவர். குழந்தைக்கு அவன் கேட்பவற்றையெல்லாம் தருவர். இவர்கள் அவனது முதிராத தீர்மானத்தால் வரும் விளைவுகளினின்றும் அவனைக் காக்கின்றனர். இந்த இரண்டு வகைப் பாதுகாப்பும் குழந்தையிடம் போராட்டங்கள் எழச் செய்கின்றன. முதலாண்டுகளில் போராட்டத்தின் அறிகுறிகள் தோன்றும். இக்குழந்தை பிற குழவிகளிடம் சமூகத் தொடர்பைத் தொடங்கும்பொழுதும், பள்ளிக்கு முதன் முதலாகச் செல்லும்பொழுதும் துன்பம் தொடங்கலாம்.

பெற்றோர் செல்லங் கொடுத்து வளர்ந்த இக்குழந்தையிடம் சுயேச்சையான மனப்பான்மையே வளர இடமில்லை. முரட்டுத் தனம் வளரலாம், பிறரைச் சார்ந்திருத்தல்[3] இவனிடம் குடி கொண்டு விடும். இவன் ஒருநாளும் பொறுப்பேற்க விரும்பு வதில்லை. பெரியவனான பிறகும் தாயோ பாட்டியோ தனக்கு எண்ணெய் தேய்த்துவிட விரும்புவான், கடின வேலையினின்றும் பின் வாங்குவான். என்றைக்கும் சிறு குழந்தையாகவே இருந்து விடுவான்.

(ii) பெற்றோரின் பிறழ்ச்சி ; குடும்பத்தில் வாழும் பல குழவிகளும் தம் பெற்றோர் கண்ணையும் கருத்தையும் கவர்ந்து செல்லக் குழவிகளாகவே வாழ முயலுகின்றன. இவ்வாறு போட்டியிடும் குழவிகள் தமக்குள்ளே ஒன்றற்கொண்டு உதவி அன்பு பூண்டு ஒழுகின், இத்தகைய போட்டியால் நன்மையே விளையும். எனினும், இந்நாளைய உலகின் கேடு அனைத்தும் போட்டியினாலேயே விளைந்துள்ளது. ஆதலின் புத்துலக அமைப்பில் கூட்டுறவை நிலைநாட்ட முயல்வோர் இத்தகைய போட்டியாம் முட்செடியை இளமையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என வற்புறுத்துகின்றனர். ஒரு குழவியைப் பெற்றோர்


  1. 7. ஆதிக்கம்-Dominance.
  2. 8. பணிதல் - Submission.
  3. 9. சார்ந்திருத்தல் -Dependence.