பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல்பு பிறழ்ந்த நடத்தை

353


குறைகளிருப்பின், தக்க முறையில் பயிற்சியளித்து மேற்படிக் குறைகளைக் களைதல் வேண்டும்.

மந்தத் தன்மை பிறவிக் குணமா, அன்றி குழந்தைப் பருவ வளர்ச்சியின் பயனா என்பதை உறுதி செய்யவேண்டும். முன்னது காரணமாயின், கழுவாய் இல்லை; பின்னது காரணமாயின், ஓரளவு கழுவாய் உண்டு. அறிதிறன் ஈவு யாதென்றும், எல்லாப்பாடங்களிலும் மந்தமா, சிலவற்றில்தானா என்றும், நினைவாற்றல் எத்தகையது என்றும், வீட்டில் வசதிக் குறைவுகள், அடக்குமுறை முதலியன உண்டா என்றும், உள்ளக் கிளர்ச்சிகளில் நெருக்கடி, மிதமிஞ்சிய அச்சம், மனத்தை நிலைநிறுத்துவதில் இடர்ப்பாடு, சோம்பல், விளையாட்டில் ஆர்வமின்மை உளவா என்றும் கவனித்தல் வேண்டும், அங்ஙனமே, பள்ளிச் சூழ்நிலைகளிலும் உள்ள குறைகளை ஆராய்தல் வேண்டும். சரியான வகுப்பில் சேர்க்கப்பெற்றமை, உடற்குறைபாடுகள், பயிற்சி முறையில் உள்ள குறைபாடுகள், கற்பித்தலில் குறைபாடுகள், பயிற்றப்படும் பொருள்கள் ஆகிய வற்றையும் ஆராய்தல் வேண்டும். படக்காட்சிகள், தன்னோக்க முயற்சி முறை, மகிழ்ச்சிச் செலவுகள், கைவேலைகள் முதலிய துறைநுட்பம் முறைகள் இவர்கட்கு உற்சாகம் அளித்தல் கூடும். தன்னம்பிக்கையையும் வெற்றி மனப்பான்மையையும் உண்டாக் கினால், இவர்களிடம் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். இவர்களை விளையாட்டுக் குழுக்களின் தலைவர்களாக்கலாம். சமூகப் பணியில் இவர்கட்கும் பெரும்பங்குண்டு என்பதை ஆசிரியர்கள் மறக்கலாகாது.

ஒதுக்கப்பெற்ற குழவிகள்: அமெரிக்கப்பள்ளி யொன்றில் சோதனையொன்று மேற்கொள்ளப்பெற்றது. ஒவ்வொரு குழந்தையும் தன் அருகில் அமர விரும்பும் குழந்தைகளின் பெயர்களை எழுதவேண்டும்; ஒருவர், இருவருடைய பெயர்களை எழுதலாம். இவ்வாறு எழுதச் செய்ததில் ஒரு குழுவில் மொத்தத்தில் 15% முதல் 38 % வரை குழந்தைகள் தம்முடன் பயிலும் மாணாக்கர்களால் தேர்ந்தெடுக்கப் பெறவில்லை. இதிலிருந்து பள்ளிகளில் மாணாக்கர்கள் பொருத்தப்பாடு எய்து வதில் இடர்ப்பாடுகளடைகின்றனர் என்பது புலனாகின்றது.

இவ்வாறு ஒதுக்கப்பெறும் மாணாக்கர்கள் தம்நிலைக்கு மிகவும் இரங்குகின்றனர். ஒருகுழுவில் மதிப்புள்ள உறுப்பினராதலால் கிடைக்கும் ஏற்றம் அவர்கட்கில்லை. விரைவில் பிறருடன் நட்பு ஏற்படுத்திக்கொள்ளும் முயற்சியைக் கைவிட்டுக் கற்பனையுலகில் கனவு கண்டு களிக்கின்றனர். மேலும், இவர்கள் தம்மிடம் ஏதோ குறையிருப்பதாகவும், தாம் மற்றவர்

க. உ. கோ-23.