பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354

கல்வி உளவியல் கோட்பாடுகள்



களைவிடத் தாழ்ந்தவர்கள் என்றும் தவறான எண்ணத்தைக் கொள்ளுகின்றனர்.

இதற்கு ஒரு காரணம், குடும்ப இடநிலையாமை. குடும்பம் அலுவல் காரணமாக அடிக்கடி இடம் மாறுவதால் மொழி, சமயம், சாதி, பொருளாதார ஏற்றத்தாழ்வு, பழக்க வழக்கங்கள் முதலியவற்றால் வேறுபட்ட மாணாக்கர்களிடையே ஒரு குழந்தை புக நேர்கின்றது. குழந்தையை அவர்கள் மதிக்காதது மின்றி வெறுக்கவும் செய்கின்றனர். மேலும், கூச்சத்தால் சமூகப் பொருத்தப்பாடு பெறாத குழந்தை, வேண்டப் பெறாத குழந்தை, பள்ளியில் புதிதாக நுழைந்த குழந்தை, வேறு நாட்டைச் சேர்ந்த குழந்தை ஆகியவர்களும் ஒதுக்கப்பெற்ற நிலையில் உள்ளனர். . -

இவர்களை உடனே பிறருடன் சேர்ப்பது கடினம்; படிப்படி யாக இதனைச் செய்யவேண்டும். முதலில் பிறருடன் நன்கு பழகும் இயல்புடைய ஒரு குழந்தையுடன் பழகச் செய்து, பிறகு விளையாட்டுகள், குழுவேலைகள் போன்றவற்றில் கலந்து கொள்ளும் வாய்ப்புகளை அளித்தால், இவர்கள் நாளடைவில் நன்முறையில் பொருத்தப்பாடு அடைவர்.

தாழ்வுணர் குழவிகள்: தாழ்வுணர்ச்சி அல்லது தாழ்வுச் சிக்கல் மிகுந்த குழந்தைகள் நமது பள்ளிகளில் பலர் உள்ளனர். தாழ்வுச் சிக்கல் ஒருவரிடம் உண்டாவதற்குப் பல காரணங்கள் கி.கிரீ, உடற்குறைகள். ஆசிரியர்களும் பெற்றோர்களும், காட்டும் ஒருதலை ஆதரவு', தோழர்களின் ஏளனம், சிறுகுறும்பு களுக்கும் அதிகமான கண்டனம் போன்றவை ஒருவரிடம் தாழ்வுச் சிக்கலை உண்டாக்கும். மேலும், ஒரு குழந்தையின் அவா கிலைக்கும் அடைநிலைக்கு உள்ள பெரும் வேற்றுமை வாயிலாகவும் இது. தோன்றுகின்றது. அடைநிலையை உயர்த்து வனவாகவும் அடைநிலையைத் தாழ்த்துவனவாகவும் உள்ள நிலைகள் யாவும் குழந்தையின் துன்பத்தைப் பெருக்கும். பெற்றோரும் பெரியோரும் குழந்தையின் திறனின்மையை வற்புறுத்துவது, விளையாட்டில் அதிகப் போட்டி, ஆசிரியரும் பெற்றோரும் உயர்ந்த குறிக்கோள்களை முன் நிறுத்துவது போன்றவை அடைநிலையைத் தாழ்த்தும் நிலைகளுக்கு எடுத்துக் காட்டுகளாகும். - -

15. &mpajá, &#&@-Inferiority complex. 16. Faqīāso a 45prai-Favouritism. - . 17. -syair piso60-Level of aspiration. 18. osol-fleoso-Level of achievement.