பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்பு பிறழ்ந்த நடத்தை 3é律

கேற்ப நம் உளமும் மூன்று பகுதிகளாக உள்ளன. அவை கனவுளம்', கனவடி உளம்', கனவிலி உளம்' என்பன. அவை முறையே மேற்படை உளம், நடுப்படை உளம், அடிப்படை உளம் என்றும் வழங்கவும் பெறும். உளம் என்பது பற்றி "இக்காலத்தார் கருதுவது; உள்ளம் என்று முன்னையோர் கருதியது இப்போதைய நனவுளத்தையே குறிக்கும். உள்ளத்தின் பெரும்பகுதி நனவுள்ளத்திற்குக் கீழே ஆழ்ந்திருப்பது மனிதனது நடத்தையை உருவாக்குகின்றது. இந்த ஆழ்ந்த உள்ளம் (நனவிலி உளம்) மிகுந்த ஆற்றல் வாய்ந்தது. நாம் வெளிப் படையாகக் காணும் அறிகுறிகளும் நடத்தையும் ஆழ்ந்த உள்ளத்தில் ஏற்படும் மாறுதல்களாலானவை. எனவே, மனிதனது பெரும்பாலான நடத்தைக்குக் காரணம், ஆழ்ந்த உள்ளமே என்பதாகும். இந்த உண்மையைத் தொகுத்து அறிவியல் அடிப்படையில் முதன் முதலாக வெளியிட்டவர் சிக்மண்ட் பிராய்ட்” என்ற உளவியலறிஞர்.

மேற்கூறிய உளங்களை விளக்குவதற்கு வில்லியம் ஜேம்ஸ்’ என்ற உளவியலறிஞர் ஒர் அரிய உவமையைக் கையாளு கின்றார். வட பெருங்கடலிலிருந்து பெரும் பனிக்கட்டி மலைகள் அட்லாண்டிக் மாபெருங்கடலில் புகும். இக்குன்று களின் கொடுமுடிகளே (குன்றுகளின் பாகமே) வெளியே தெரியும். பனிக்கட்டி மலையொன்றினை முழு உள்ளத்துடன் ஒப்புமைப்படுத்திக் கூறும்பொழுது சிறிதளவு தோன்றும் கொடு முடியை நனவுளத்தோடு ஒப்புமை கூறலாம். அவ்வாறு நிலை யாகத் தோன்றிக் கிடக்கும் பகுதிக்குக் கீழேயுள்ள சிறு பகுதி சுற்றியுள்ள அலைவீச்சினால் தோன்றியும் வரும், இதனை நனவடியுளத்துடன் ஒப்புமை கூறலாம். இதற்குக் கீழாகப் பெருமலைபோலக் கிடக்கும் பகுதி தாக்கினால் பெருங்கப்பல் களும் அச்சுவேறு ஆணிவேறாகச் சிதைந்து உடையக் காண் கின்றோம். இதனை நனவிலியுளத்திற்கு ஒப்பிடலாம். நனவுளம் முழு உள்ளத்தில் கோடியில் ஒரு பங்கே என்றும் கூறி விடலாம். புறக்காற்றாலும் பிறவற்றாலும் இந்தப் பணிக்கட்டி மலை தலைகீழாகப் புரளுவதும் உண்டு. அதுபோலச் சில சமயம் நனவிலியுளம் நனவுளமாக மாறுவதும் உண்டு.

25. gigorajørth-Conscious mind. 26. f5 garsulą. 2-6rth-Sub conscius mind. 27. Borgödöl 2-6Tub-Unconscious. mind. 28. Gśudgirl - & Log Irů@-Sigmund Freud. 29. 676,60tutb Gaghah-William James, 30. Gul-QL1(551&l-jo-The Arctic Ocean.