பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

362

கல்வி உளவியல் கோட்பாடுகள்


இத்தகைய உளமாற்றம் சிறுகச் சிறுகவும் எழலாம்; திடீர் என்றும் எழலாம். எப்படிப் பனிக்கட்டி மலையின் பெரும்பகுதி வெளியே தெரியாமல் உள்ளே ஆழ்ந்துள்ளதோ, அதுபோன்று நனவிலியுளமும் உள்ளே ஆழ்ந்துள்ளது. எப்படி மேலே தெரியும் பனிக்கட்டி மலைக்குத் தண்ணீரில் ஆழ்ந்திருக்கும் பாகம் அடிப்படையாக உள்ளதோ, அப்படியே நனவிலியுளமும் நனவுளத்திற்கு அடிப்படையாக உள்ளது. வெளியே தெரியும் பணிக்கட்டிக் குன்றின் பகுதியும் தண்ணீரில் மூழ்கிக் கிடக்கும் அதன் அடிப்பாகமும் ஒரே மலையின் இரு பகுதிகளே; அஃதே போன்று நனவுளமும் நனவிலியுளமும் ஒரே உள்ளத்தின் இரு பகுதிகளாகும். நம்முடைய உள்ளத்தில் பதியப் பெற்றுள்ள நினைவுகள் தகுந்த தூண்டல்களால் நம் நனவுக்கு வருகின்றன; சாதாரணமாக நனவுக்கு வராதவை சிறப்பான தூண்டல்களால் நனவுக்கு வருகின்றன. ஆனால், பல நினைவுகள் பலமான தூண்டல்களால் அல்லது மனத்தின் பெருமுயற்சியால்தான் வெளி வருகின்றன. இவை ஆழ்ந்த மனத்திலிருந்து நனவிலியுளத்திலிருந்து-வெளி வருபவை.

நனவிலி உளம் குழந்தை பிறந்தவுடன் சிறிதளவு இருந்த போதிலும் குழந்தை வளர வளர, அதன் நடத்தைத் தடைகளும் விதிகளும் அதிகம் ஏற்பட ஏற்பட, நனவிலியுளத்தில் அடை பட்டிருக்கும் இச்சைகளும் அவற்றைச் சார்ந்த அநுபவங்களும் அதிகப்படுகின்றன. எனவே, நனவிலியுளத்தில் இருப்பவை பெரும்பாலும் ஒருவன் தன் வாழ்க்கையில் நேராக வெளிப் படுத்த முடியாத அநுபவங்களாகும். இதைத்தான் நனவிலி உளம் நனவுளத்தினின்றும் வளர்ந்தது என்று பொதுப்படையாகக் கூறுவர். நனவுலியுளத்தில் ஒருவனது சொந்த அநுபவங்களோடு அவனுடைய மூதாதையர் அநுபவங்களும் அடைப்பட்டுள்ளன என்றும் ஃபிராய்டு கூறியுள்ளார். ஆனால், இந்தக் கருத்தை ஆராய்ந்து அடிப்படையான உண்மையை வெளி யிட்டவர் ஃபிராய்டின் மாணாக்கரான சி. ஜே. யுங்[1]

என்பார். மனிதன் இறந்து போன தன் மூதாதையரையும் தன் ஆற்றல்களையும் இணைக்கும் ஒரு சங்கிலி போன்றவன். ஒருவனது உடலமைப்பு அவனுடைய மூதாதையரது உடலமைப்பை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அங்ஙனமே ஒருவனது உள்ளமும் அவனுடைய மூதாதையரின் உள்ளத்தை அடிப்படையாகக் கொண்டது' என்பது யுங் தரும் விளக்கம். இந்த நனவிலியுளத்தின் வளர்ச்சியும் மாற்றமும் மனத்தினுள் நடை


  1. 31. சி.ஜே.யுங் -C. J. lung.