பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

364

கல்வி உளவியல் கோட்பாடுகள்


காணப்பெறுகின்றது என்று சில உளவியலார் கருதுகின்றனர்; வேறு சிலர் இஃது உணவுக் குறைவின் அறிகுறி என்கின்றனர். மற்றும் சிலர் இஃது உளத்தில் மறைந்து கிடக்கும் உணர்ச்சிச் சிக்கலின் வெளிப்படைச் செயல் என்றும் கூறுகின்றனர். இவை ஒவ்வொன்றிலும் ஓரளவு உண்மை இல்லாமல் இல்லை. தனிப்பட்ட குழவி ஒவ்வொன்றையும் நாம் ஆராய வேண்டும் என்பதையும் இவை உணர்த்துகின்றன.

விடாது சுவைத்தலால் நேரிடும் கேடுகள் : குழவிகளிடம் இப் பழக்கத்தை நீக்குவதற்கு முன்னர் இப்பழக்கத்தால் நேரிடும் கேடுகளைப்பற்றி நாம் அறிந்து கொள்ளுதல் இன்றியமையாதது.

இப்பழக்கத்தால் பற்களும் பற்களின் வரிசையமைந்த தாடைப் பாகங்களும் பாதிக்கப்பெறும். மேல் வரிசைப் பற்கள் முன் பக்கம் வளைந்து தள்ளப்பெறுகின்றன; சில சமயம் கீழ் வரிசைப்பற்கள் பின்னுக்குத் தள்ளப் பெறுகின்றன. பெரு விரலின் வட்ட வடிவமான பாகத்தை மேல்நோக்கி வைத்துச் சுவைக்கும் பழக்கமுடைய குழவிகளின் பற்களுக்குத்தான் அதிகமாகக் கேடுண்டாகும். விரலும் வளர்ச்சியில் குன்றிவிடும். குழவிப் பருவத்தில் மறைந்து, பிற்காலத்தில் மீண்டும் பெரு விரல் சுவைக்கத் தொடங்கும் குழவிகளின் பற்கள் முதலில் இருந்தது போலவே முன் பக்கம் தள்ளப்பெறும். தூங்கும் பொழுதுகட பெருவிரல் சுவைக்கும் பழக்கமுடைய குழந்தைகளுக்கு ஏற்படும் குறைகளை நீக்குவதுதான் மிகவும் கடினமாகும்.

இப் பழக்கத்தால் நேரிடும் உடல்பற்றிய விளைவினைவிட உள்ளம்பற்றிய கேடுதான் அதிகம். வயதுவந்த சிறுவர்கள் இதனைக் குறித்து நாணப்படினும், இப்பழக்கத்தை விட்டுவிட முடியாதிருப்பதை உணருங்கால், தன்னம்பிக்கை இழந்து தங்களுக்கு அதிகக் கேட்டினை உண்டாக்கிக் கொள்வர்.

தாங்கள் பிறரிடம் உரையாடும்பொழுதும் சிரிக்கும் பொழுதும் தாங்கள் உள்ளங்கைகளை உதடுகளின் மேல் வைத்துத் தங்களுடைய ஒழுங்கற்ற பற்களை மறைத்துக் கொள்ள முயலுகின்றனர். இதனால் பிறருடன் எளிதாகப் பேசும் வாய்ப்பு குறைகின்றது. அவர்களுடன் பழகுவதில் தன் உணர்ச்சியும் ஏற்படுகின்றது.

இப்பழக்கத்தைத் தடுத்தல்: இப் பழக்கம் குழவிப் பருவத்தின் தொடக்கத்தில் நடைபெறுவதைக் காண நேர்ந்தால், அது ஒரு பழக்கமாக ஆகாமலேயே தடுத்தல் கூடும்; குழந்தையின்