பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

கல்வி உளவியல் கோட்பாடுகள்


மருத்துவத்துடன் நெருங்கிய தொடர்புடையது. இதில் உளவியலின் கொள்கைகள், முறை வகைகள் முதலியவற்றைத் தனிமனிதனின் நலவளர்ச்சிக்காகப் பயன்படுத்தும் சாத்திரமும் சிறப்பு முறையும் அடங்கியுள்ளன. -

நோயாளி ஒவ்வொருவரைப்பற்றியும் பல விவரங்கள் தயாரிப்பதை நாம் அறிவோம். அதுபோலவே குழந்தைகளுடனும், பல முறை உரையாடிச் செய்திகளை வருவிக்கலாம். ஏதாவது குறைபாடுகள் காணப்பெறின், அவற்றை இன்னவை எனக் கண்டறியவும் (Diagnose) அவற்றிற்குரிய காரணங்களையும் பரிகாரங்களையும் தேடவும் இம் முறை பயன்படு கின்றது. மனிதனுடைய நோய்களைக் குணமாக்க வேண்டிய எல்லாச் சாதனங்களும் உளவியலாரிடம் இன்மையால் அவர் அடிக்கடி மருத்துவர் உதவியிவை நாடவேண்டியுளது. கற்றவிலும், பிறருடன் பழகுதலிலும் குழந்தைகளிடம் குறைகள் காணப்பெறலாம்; அல்லது காரணமற்ற பயன் ஏற்படலாம். இவற்றை யெல்லாம் ஆராய்ந்து விளக்க இம் முறை பயன்படுகின்றது.

மேனாடுகளில் பொதுப் பள்ளிகள், சிறார் நீதிமன்றங்கள், கொலைக்குற்ற நீதி மன்றங்கள், சிறைச் சாலைகள், மருத்துவ நிலையங்கள் போன்றவற்றுடன் உளவியல் மருத்துவ நிலையங்கள் இணணக்கப் பெற்றுள்ளன. தனியார் நடத்தும் இவ்வித நிலையங்களும் ஆங்குள. உளவியலார் கவனிக்க வேண்டிய எல்லா வயது நிலையிலுள்ளவர்களும் இவண் கொணரப்பெறுகின்றனர். இங்குப் பல்வேறு சோதனைகளுக்கு அவர்களை உட்படுத்தித் தேவையான விவரங்களைத் திரட்டுகின்றனர். இவ் விவரங்களுடன் தனியாள் வரலாறும்[1] சேர்கின்றது.

ஆய்வுமுறை :[2] இதனைச் சோதனை முறை என்றும் செய் காட்சி முறை என்றும் வழங்குவதுண்டு. இம்முறையில் நாம் ஆராய வேண்டிய கூறுகளை நன்கு கட்டுப்படுத்திகொள்ள வேண்டும். அறிவியலார் இம்முறையைச் சிறப்பாகக் கையாளுகின்றனர். இரண்டு எடுத்துக்காட்டுகள் தருவோம். ஒன்று, சில செடிகொடிகள், மிக வெப்பமான நிலத்தில்தான் விளைகின்றன. குளிர்நாட்டில் வாழ்வோர் இச்செடிகொடிகளைப்பற்றி ஆராய வேண்டுமாயின், திரைகடலோடியும் தேடியுமே ஆராய வேண்டும். அக் குளிர்நாட்டினர் அவ்வாறு உழலாது வெப்ப


  1. 53. தனியாள் வரலாறு -Case history
  2. 54, ஆய்வு முறை-Experimental method.