பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

372

கல்வி உளவியல் கோட்பாடுகள்


போராட்டத்திற்கும் ஒருவித உறவு உண்டு. இந்நிலையில் மனப் போராட்டத்தை நீக்குவதற்குச் சிகிச்சை தருதல் வேண்டும். இதற்கு உளவியல்-மருத்துவரின் யோசனையும் வழியும் பெரும் பயன் தரும்.

ஊர்சுற்றுதல் (சோம்பித்திரிதல்)

ஊர்சுற்றுதல்[1] : ஆசிரியர்களின் ஆட்சிப் பிரச்சினைகளில் முக்கியமானதொன்று. அச்சம், கூச்சம் ஆகியவற்றைவிட இது மிகவும் பொல்லாதது என்ற சில ஆசிரியர்கள் கருதுகின்றனர். ஊர்சுற்றுபவன் பள்ளிக்குச் செல்வதை விரும்பாமல் வேறு செயல்களில் ஈடுபடுவதற்குத் திட்டம் போடுவான். அவன் மீன் பிடிக்கச் செல்லவும், படக்காட்சியைக் காணவும், சர்க்கஸ் பார்க்கவும், வெளியூர் செல்லவும் விரும்புவான். இவனுக்குத் தன்னுடைய சொந்த பொருத்தப்பாட்டில் பிரச்சினை இருக்கலாம்; அல்லது இராமல் இருக்கலாம். ஆயினும், பள்ளிப் பொருத்தப் பாட்டுப் பிரச்சினையும் இவனிடம் உள்ளது என்பது உறுதி.

காரணங்கள்: பள்ளி வேலைகளில் இருக்கும் கவர்ச்சியை விட வேறு செயல்கள் அவனுக்கு அதிகக் கவர்ச்சியைத் தருதல்; (ii) பள்ளியின்மீது வெறுப்பு, (iii) வேறு இடங்களில் தான் மேற்கொள்ளும் வேலைகளில் மனநிறைவு பெறுதல்; (iv) குழந்தைகள் சரியான நேரத்தில் பள்ளிக்குச் செல்வதற்குரிய ஒத்துழைப்பு பெற்றோரிடம் இல்லாமை (எ.டு) குளிப்பாட்டுதல், உணவு படைத்தல் போன்றவை தகுந்த நேரத்தில் செய்யப் பெறாமை.

பயனுள்ள யோசனை : (i) பள்ளிச் செயல்கள் கவர்ச்சியுடையனவாக அமைதல் வேண்டும். கதை, விளையாட்டு, கவர்ச்சிகரமான கைத்தொழில்கள், சிறந்த கற்பிக்கும் முறைகள் முதலியவை சிறுவர்களைப் பள்ளிக்கு வரத்துரண்டும் சாதகமான ஏற்பாடுகள். (ii) எந்தச் செயல்களும் நோக்கமுடையனவாகவும் அவற்றின் பயன் சிறுவர்கள் உணரவும் எய்தவும் கூடியனவாகவும் இருத்தல். (iii) பள்ளி வராமைக்குத் தடைகளாக இருக்கும் ஏதுக்களைக் கண்டறிந்து அவற்றைக் களையத் துணை செய்தல்.

பொறாமை

சினத்தின் வளர்ச்சியே பொறாமையாக[2] வடிவெடுக்கின்றது. மக்கள்மீது காட்டப்பெறும் வெறுப்புணர்ச்சியே பொறாமை-


  1. 44. ஊர் சுற்றுதல்-Truancy.
  2. 45. பொறாமை -solo-Jealousy.