பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல்பு பிறழ்ந்த நடத்தை

377



அடுத்த நாள் வருகைப் பதிவு வேலையைத் துரைராஜ் மேற்கொண்டான். அவனுடைய நடத்தையில் வியத்தகு மாற்றம் காணப்பெற்றது. அதிலிருந்து துரைராஜ் உரத்துப் பேசுவதையே நிறுத்திக் கொண்டான்; ஒத்துழைக்கும் மாணாக்கனாக மாறிவிட்டான்.

இது மாணாக்கனின் வெளித்தோற்றத்திற்கும் அதனை, ஆசிரியர் சமாளிப்பதற்கும் ஒர் எடுத்துக்காட்டாகும். இம்மாதிரி நடத்தைக்குக் காரணம் அம்மாணாக்கனிடம் படிந்திருந்த தாழ்வுச் சிக்கலும் [1] , தான் ஒதுக்கப்பெற்றதாகக் கருதுதலுமே. ஆசிரியர் துரைராஜுவினிடம் படிந்திருந்த இந்த இரண்டு மனப்போக்குகளையும் நீக்கிவிட்டதால், துரைராஜு இயல்பான மாணாக்கனாகிவிட்டான்.

தாக்குங் தன்மை[2]

“குழந்தைகளுக்கும் அவர்களது நோக்கங்களுக்கும் இடையில் பிறரால், தனி மனிதனால் அல்லது சமூகத்தால் திணிக்கப் பெற்ற தடைகளுக்கு ஏற்ப மேற்கொள்ளப்பெறும் பிடிவாதமான துலங்கல்களே தாக்குத்தன்மையாகும்” என்று மர்பியும் அவரது தோழர்களும் வரையறை செய்துள்ளனர். இதிலிருந்து தாக்குந் தன்மை ஒரு பிறவிப் பண்பு அன்றென்றும், அஃது ஒரு நெருக்கடியைச் சமாளிக்க எழும் பண்பு என்றும் பெறப் படுகின்றது. ஒரு குழந்தையின் நோக்கத்திற்குத் தடையேற் பட்டாலும், அல்லது அக்குழந்தை அவமானப்படுத்தப்பெற்றாலும், அல்லது அதற்குத் தோல்வியேற்பட்டாலும் அக்குழந்தையிடம் தாக்குந் தன்மை வெளிப்படலாம்.

தாக்குத்தன்மையில் இருவகையுண்டு. ஒன்று, குழந்தைகள் தம்முடைய தன்னம்பிக்கையால் வெளிக்காட்டுவது; இரண்டு, பாதுகாப்பின்மை உணர்ச்சியால் வெளிப்படுவது.

இரண்டாவது வகையில், குழந்தைகள் தம்மை உலகம் வேண்டாம் என்று சொல்வதாக உணர்வதால் உலகினைத் தாக்க நினைக்கின்றன; தம்முடைய தன் மதிப்பை மீண்டும் பெறவேண்டுமென்று தன்னைவிட இளையோர்மீதும் அல்லது, எந்த நிகழ்ச்சியின் மீதும் ஆதிக்கம் செலுத்துகின்றன; அல்லது மிகவும் ஆழ்ந்த மனமுறிவு [3] அவைகளிடமிருப்பதால், அஃது


  1. 51. தாழ்வுச் சிக்கல் -inferiority complex.
  2. 52. தாக்குந் தன்மை-Aggressiveness.
  3. 53. மனமுறிவு -Frustration.