பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

386

கல்வி உளவியல் கோட்பாடுகள்


காட்டும். இவற்றை ஆராயுங்கால் அடை நிலைக்கும் அவா நிலைக்கும் உள்ள வேற்றுமையை நினைவுகூர்தல் இன்றியமையாதது. உண்மையில், என்னிடமுள்ள எல்லாப் பற்றுகளும் என்னுடைய தற்பற்றைச்சுற்றிலும் அமைகின்றன. என்னிடம் உண்மையில் உறுதியாக இல்லாத, ஆனால் நான் அவாவி நிற்கும், பற்றுகள் யாவை? இத்தகைய பற்றுகள்தாம் குறிக்கோள்கள்8; இவற்றைத் தழுவிக்கொண்டு நிற்கும் தான் என்பதை நாம் அவற்றாகக் கருதலாம். நாம் எவ்வளவுக்கெவ்வளவு இந்தத் தான் என்பதை விரும்பு கின்றோமோ அவ்வளவுக்கவ்வளவு அதனை அடைதல் கூடும். இதைத் தெளிவாகக் கருதி இதனை அடைய முயலுவோமாயின், நாம் மிக உயர்ந்த ஒழுக்கநிலைக்கு உயர்ந்துகொண்டுள்ளோம் என்ற நிலை ஏற்படுகின்றது.

இவ்விடத்தில் ஒன்று நினைவுகூர்தற்பாலது. பல பற்றுகள் ஏற்பட்டு ஒழுங்கு பெறுங்கால், ஒரு பற்று சிறந்ததாகவும் ஏனையவை தாழ்ந்தவையாகவும் அம்ையும். இச்சிறந்த பற்றை முதன்மைப் பற்று9 எனவழங்குவர். இத்தலைமைப்பற்றே ஒருவருடைய வாழ்க்கையின் முக்கிய நோக்கத்தைக் குறிக்கும். இப்பற்றுதான் ஏனைய பற்றுகளை ஆட்கொள்ளுகின்றது. ஏனைய பற்றுகள் தனித்தனியாக இயங்குவதைவிட அவை இப்பற்றின்கீழ் இயங்கும்பொழுதுதான் ஓர் உயிரியின் நடத்தை யில் ஒருமைப்பாடு அமைகின்றது. மேலும், பிற பொருள்களைச் சுற்றிப் பற்றுகள் உண்டாவதுபோல் நம்மைக் குறித்தும் பற்று ஏற்படும். இதைத் தன்-மதிப்புப்பற்று10 என்று வழங்குவர் உளவியலார். இதைத்தான் உலகவழக்கில் தன் மானம்11 என்று சொல்லுகின்றோம். இதில் நம்மைச் சுற்றி உள்ளக் கிளர்ச்சிகள் அமைகின்றன. மனிதன் தன்னுடைய தன்மையைத் தனிப் பொருளாகவும் மதிப்புடையதாகவும் கருதுகின்றான்; பல பட்டறிவுகளைப் பெறுகின்றான்; தன்-மதிப்பை வளர்க்க முயலு கின்றான். இதன் மூலமாகவே உள்ளத்தெழும் முரண்பாடு களைத் தீர்த்தல் இயலும்; காந்தியடிகள் போன்ற பெரியார் களிடம் தன்.மதிப்புப்பற்று சிறந்து விளங்குகின்றது; அவர்கள் தன்மையில் ஒர் ஒருமைப்பாட்டையும் காணமுடிகின்றது.

பற்றுகளின் வகை: பற்றுகள் இருவகைப்படும். ஒன்று, உடன் பாட்டுப் பற்று; மற்றொன்று, எதிர்மறைப் பற்று. அஃதாவது,


8. குறிக்கோள்-Ideal. 9. முதன்மைப்பற்று-Master sentiment. 10. தன்மதிப்புப்பற்று-Selfregarding sentiment 11. தன் மானம்-Self-respect.