பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

388

கல்வி உளவியல் கோட்பாடுகள்


பல இன்புறுத்தும் செயல்களைப் புரிகின்றான். அவள் அவனைக் கடிந்து கொண்டால், அவளுடன் சினங்கொள்ளுகின்றான்; அவளுடன் பேச மறுக்கின்றான்; அல்லது அவளைத் திட்டுகின்றான். சிலசமயம் சினம் மீதுார்ந்து நிற்கும்பொழுது அவளுடைய ஆடையைக் கடித்துக் கிழிக்கின்றான். இத்தகைய செயல்கள் திடீரெனத் தோன்றுபவை; தொடர்பற்றவை. ஆனால், சற்று வளர்ந்த பிறகு அவனுடைய நடத்தையும் மாறுகின்றது. நாளடைவில் தன் பேச்சினாலும், நடத்தையினாலும் அவள் மனத்தைப் புண்படுத்த விரும்புவதில்லை; தன் தாயின் நலத்தைப் பொருட்படுத்தத் தொடங்குகின்றான். இப்பொழுது அவளுடைய குறைகள் யாவும் நிறைகளாகப் புலப்படுகின்றன. தான் செய்யும் ஒவ்வொரு செயலும் அவளை எவ்வாறு பாதிக்கும் என்று மதிப்பிடுகின்றான். அவன் தன் அன்னையிடம் கொண்டுள்ள அன்புப்பற்று அவனுடைய வாழ்விலும் நடத்தை யிலும் ஓர் ஒருமைப்பாடு, ஒழுங்கு, நிலைப்புத்தன்மை, தொடர்ச்சி முதலியவற்றை உண்டாக்கிவிடுகின்றது.

தனிப்பட்ட ஒரு பற்று வளர்ந்து இயல்பூக்க வாழ்க்கையை ஒழுங்கும் இசைவும் கூடியதாகச் செய்வதைப் போலவே, பற்றுகள் யாவும் ஓர் ஒழுங்கில் அமைந்து ஒன்றோடொன்று இணைந்த அமைப்பாக வளர்கின்றன. தாழ்ந்த பற்றுகள் உயர்ந்த பற்றுகளாகவும், உயர்ந்த பற்றுகள் முதன்மைப் பற்றாகவும் வளர்கின்றன. நாட்டுப்பற்று எவ்வாறு வளர் கின்றது என்பதை எடுத்துக்காட்டாகக் கொண்டு இதனை விளக்குவோம். சிறுவன் முதலில் பெற்றோரிடம் பற்றுகொள் கின்றான்; இப்பற்று நாளடைவில் விளையாட்டுத் தோழர்கள், பிற குடும்பங்கள், ஆசிரியர்கள், பள்ளிகள், மாவட்டம் போன்ற வற்றின்பால் முறையே விரிந்து செல்கின்றது. குடும்பப்பற்று முதலியவை முறையே ஒவ்வொன்றுக்கும் தாழ்ந்தவையாக அமைந்து நாட்டுப்பற்றுக்கு முதன்மை கொடுக்கின்றன. நாட்டுப் பற்றும் தாழ்ந்த பற்றாக அமைந்து மானிட இனப்பற்றை முதன்மையுடையதாக ஒப்புக்கொள்ளலாம். மானிட இனத்தின் நலத்தை நம்முடைய வாழ்க்கையின் பயனாகக் கொண்டால், நம்முடைய தன்-மதிப்புப்பற்று தலையோங்கி ஏனைய பற்றுகள் யாவற்றையும் அடக்கியாளக் கூடியதாக அமையும். இதன் வளர்ச்சியே நமது ஒழுக்கத்தின் வளர்ச்சி என்று கூறலாம். எனவே, ஒழுக்க வளர்ச்சியில் உள்ளக்கிளர்ச்சி நிலை, காட்சிப் பொருள் பற்றுநிலை, அறப்பற்றுநிலை, தன்-மதிப்புப் பற்று நிலை என்ற நான்கு படிகளைக் காண்கின்றோம்.

பற்றுகளும் நடத்தையும்: பற்றுகளே நடத்தையை அறுதியிடு கின்றன. அவை நடத்தையின் ஒவ்வொரு பாகத்திலும் பிரதி