பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒழுக்க வளர்ச்சி

395


என்ன? பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு மன உறுதியில் பயிற்சி யளிக்காமையே. சிறுவயதிலிருந்தே தவறிழைக்காது தடுக்கப் பெற்ற ஒருவன் வளர்ந்தவனான பிறகு பரந்த இவ்வுலகில் தன் அலுவல்களைத் திறமையுடன் மேற்கொள்வான் என்று கருதுவது பயனற்ற செயலே. செயல் தவறாகப் போகுமென்று அஞ்சி சரியானதையும் இயற்றத் துணிவு இல்லாதவரை உண்டாக்கும் கல்வி முறையால் யாது பயன்? இது கல்வி தன் கடமையில் தவறியதாக முடியுமல்லவா? சில சமயம் பயிற்சியளிக்கும் அளவு அளவு மீறவும் கூடும், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு அன்றோ? அளவுக்கு மீறினால் பிடிவாதமும், முரட்டுத்தனமுமே விளைவுகளாக வந்து சேரும். ஆயினும், நெறிக்கல்வியில்33 துணி தலுக்குப் பயிற்சி தருவதையும் சேர்க்கவேண்டும். ஒழுக்கப் பயிற்சியில் அறிவு நிலைக் கூறுக்கும் உணர்ச்சி நிலைக் கூறுக்கும் தக்க கவனம் செலுத்தப் பெற்றால், துணிதலின் பயிற்சி அறிவு டைமையாகவும் இருக்கும்; நன்மையானதாகவும் அமையும்.

குறிக்கோள்களும் வாழ்க்கைத் தத்துவவளர்ச்சியும்

முழுத் தன்மை பெற்ற ஒழுக்கத்தில் சில குறிக்கோள்கள் நிச்சயம் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதை நாம் உறுதியாகக் கூறலாம்.

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஒம்பப்படும்33.

என்ற குறள் காட்டும் ஒழுக்கம் இத்தகையதே. சமூகம் பாராட்டும் அல்லது பழித்துக் கூறும் நடத்தையைவிடக் குறிக்கோள்கள் நெறிப்படுத்தும் நடத்தையே மிக உயர்ந்தது. இங்ங்ணம் தம்மிடமுள்ள உள்ளொளி யால் இயங்குவோர் ஒரு சிலரே; சமூகத் தாக்குதல்களை அவர்கள் சிறிதும் பொருட் படுத்தார். இவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து கிடப்பர். இத்தகைய குறிக்கோள்கள் குழந்தையின் வாழ்க்கை யில் மிக மெதுவாக ஏற்படுகின்றன; அவை பெரும்பாலும் குழந்தை அதிகமாக மதிக்கும் அல்லது விரும்பும் மக்களிடமிருந்தே-(எ.டு) பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் கருத்தேற்றத்தின்34 மூலம் அமைகின்றன. அறப்பற்றுகள் எங்ஙனம் வளருகின்றன என்பதை மேலே உரைத்தோம். அதை இன்னும் சற்று விளக்குவோம். மாக்கேல் என்ற உளவியல் அறிஞர் முக்கியமாகத் தொற்றுநோய் போன்ற ஒத்துணர்ச்சி-


32. நெறிக்கல்வி-Moral education.
33. குறள்.131.
34. கருத்தேற்றத்தின்-Suggestion.