பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல்-12

மதிப்பீடும் சோதனையும்


குழந்தைகள் பள்ளிகளிலும் பள்ளிக்கு வெளியிலும் கற்றவற்றை அளந்தறியப் பயன்படுத்தும் சோதனைகளைக்1 கல்வித் துறை ஆய்வுகள் என்று குறிப்பிடலாம். ஆசிரியர்கள் கற்பித்தலால் குழந்தைகள் அறிந்து கொண்டவற்றையும், வகுப்பறை, பள்ளி அநுபவங்களால் அறிந்து கொண்டவற்றையும் பள்ளிக்கு வெளியில் பெறும் அநுபவங்களால் அறிந்துகொண்டவற்றையும் தனித்தனியாகப் பிரித்து அறிவதும், ஒவ்வொரு வகையிலும் அறிந்துகொண்டது எவ்வளவு என்பதைக் கணக்கிட்டு அறிவதும் இயலாதவை. எனவே, எல்லாத் துறைகளிலும் கற்றவற்றை ஒரு சேரத்தான் அறிந்துகொள்ள இயலும். மாணாக்கன் எவற்றைக் கற்றுள்ளான், எவ்வளவு நன்றாகக் கற்லுள்ளான் என்று அறுதியிடுவதுதான் மதிப்பிடுதல்2 என்பது.

சிறிது காலமாகக் கல்விபற்றி மேற்கொள்ளப்பெற்று வரும் ஆராய்ச்சிகளில் ஒன்று தேர்வுகளைப்3பேற்றிய ஆராய்ச்சியாகும். நீண்ட காலமாகப் பள்ளிகளில் மேற்கொள்ளப்பெறும் தேர்வு களின் நோக்கங்களைப்பற்றியும், அவை எந்த அளவு முற்றுப் பெற்றுள்ளன என்பதைப்பற்றியும் பல நாடுகளில் ஆராய்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இவற்றின் பயனாகப் பல புதிய சோதனைக் கருத்துகளும் கிடைத்துள்ளன.

தேர்வுகளின் நோக்கம்: பயிற்றலின் பயனை அளந்தறியப் பயன்படுபவை தேர்வுகள். எனவே, அவை தொன்றுதொட்டு நடைபெற்று வருகின்றன. வகுப்பு மாற்றம், பள்ளிக்கட்டணச் சலுகை, தொழிலகங்களுக்கும் அலுவலகங்களுக்கும் ஆட்களைப் பொறுக்கி எடுத்தல் ஆகியவற்றிற்கு அவை மேற்கொள்ளப்-


1. சோதனைகள்-Tests.
2. மதிப்பிடுதல்-Evaluation.
3. தேர்வுகள்-Examinations