பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

408

கல்வி உளவியல் கோட்பாடுகள்



விடும்படிச் செய்தல், அவற்றின்கீழ்க் கோடிட்டுக் காட்டும் படியும் கூறலாம்.

  (எ-டு) கீழ்க்கண்டவற்றில் ஒவ்வொன்றிலும் அவ்வினத்தில் அடங்காத ஒரு சொல் உள்ளது. அச்சொல்லை மட்டிலும் அடியில் கோடிட்டுக் காட்டுக. 
 1. புறா,கோழி, கிளி, கழுதை, குயில். 
 2. அடுப்பு, அகப்பை, கரண்டி, கிண்ணம், புத்தகம். 
 3. நீலகிரி, வைகை, நருமதை, காவிரி, கோதாவரி. 
 4. மொச்சை, வாழை, துவரை, பயறு, உழுந்து.
  ஒப்பிட்டுக் காட்டல்': கொடுத்த ஒரு பொருள். எதனை ஒத்துள்ளது என்று காட்டச் செய்தல். இவ்வாறு கூறுவதில் சற்று மாணாக்கர்கட்கு உதவியாக இருக்கும்படி இஃது அதை ஒத்திருப்பதுபோல் என்று ஒர் எடுத்துக்காட்டைக் கூறியபின் கொடுத்துள்ள பொருள் எதை ஒத்துள்ளது என்று கூறும்படிச் செய்யவேண்டும். .
  (எ.டு) கீழ்க்காணும் வாக்கியங்களில் கோடிட்ட இடங் களில் ஏற்ற சொற்களால் நிரப்புக. .
  1. அரசி எப்படி அரசரின் மனைவியோ, அவ்வாறே தாய் - ஆவாள். 
  2. சந்திரன் பூமியைச் சுற்றுவதுபோல, பூமி  சுற்றுகின்றது. 
  3. வெள்ளைக்குக் கறுப்பு எவ்விதமோ, அவ்விதமே நன்மைக்கு 
  4. என்பிலதனை வெயில் போலக் காயுமே - அறம். .
  நல்ல சோதனைகளின் சிறப்பியல்புகள்: உளநூல் அறிஞர் களும், கல்வி வல்லுநர்களும் அடியிற் காண்பனவற்றை நல்ல சோதனைகளின் சிறப்பியல்புகளாகக் கூறுவர். சோதனைகளை ஆக்குவோரும் அவற்றைக் கையாளுவோரும் இவ்விலக்கணத்தை நன்கு அறிந்திருத்தல் வேண்டும்.
  தகுதியாற்றல்': அல்லது ஏற்புடைமை அளவிடுங் கருவி அளக்க முற்படும் பொருளை எவ்வளவு தூரம் அளக்கின்றதோ அதுவே தகுதியாற்றல் என்பது. அதாவது, அஃது எதனை - அளக்க முயலுகின்றதோ அதனையே அளக்க வேண்டும். நாம்


14. ஒப்பிட்டுக் காட்டன் சோதனைகள் A இ tests. 15. 555urri pāj-Walidity. w :