பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மதிப்பீடும் சோதனையும்

409

அளக்க விரும்பும் பண்பைச் சரியாக அளப்பதுதான் தகுதி வாய்ந்த சோதனையாகும். எடுத்துக்காட்டாக, ஒருவருடைய உடலின் எடையை நிறுக்க விரும்பினால் அவரை எடைகாணும் தராசினால் நிறுத்துக் காணவேண்டும். ஆனால், அடிக்கோலைக் கொண்டு (Foot.rule) அவருடைய எடையை அறுதியிட இயலாது. அடிக்கோலும் தராசும் தகுதியாற்றல் பெற்றவை தாம். ஆனால், ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட செயலுக்குத் தான் தகுதியாற்றலுடையது. இங்கனமே அறிதிறனைச் சோதிக்க நினைக்கும் சோதனை இயற்கையான அறி திறனைச் சோதியாமல், பள்ளிகளில் பயின்றவற்றையோ, ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் கற்றவற்றையோ சோதித்தால் அஃது ஏற்புடைய சோதனையாகாது. நடைமுறையிலுள்ள சோதனைகளில் கணக்கறிவைச் சோதிக்க ஆயத்தம் செய்யப்பெற்ற வினாக்கள் உண்மையில் மொழியறிவைச் சோதிப்பவையாக அமைந்து விடுவதுண்டு. அவ்வினாக்களை எளிய நடையிலோ தாய் மொழியிலோ கூறினால் மாணாக்கன் சரியாக விடையிறுக் கின்றான்; ஆனால், பிறமொழியிலோ, கடுமையான மொழி யிலோ அமைந்தால் மொழியின் கடுமையால் தவிக்கின்றான். புதிய முறைச் சோதனைகளில் இக்குறை நீக்கப்பெற்றுச் சோதனைகள் தகுதியாற்றலைப் பெறுகின்றன. நம் கருதும் திறன், அல்லது பண்பினைத்தான் சோதனை சோதிக்க வேண்டும்.

முரண்படாமை[1] நல்லசோதனையின் மற்றொரு சிறப்பியல்பு முரண்படாமை எனப்படுவது. எதை அளந்தறிய வேண்டுமோ அதை மிகவும் திறமையாக அளந்தறிவதை முரண்படாமை என்று வழங்குவர். அஃதாவது, ஒன்றைப் பலதடவை சோதித்தாலும், ஒரே விடை வருவதாகும். முரண்படாமை யுடைய ஒரு குறிப்பிட்ட சோதனையை ஒரே கூட்டத். தினரிடையில் இடையிட்டு இடையிட்டுப் பன்முறை பயன் படுத்தினாலும் ஒரேவிதமான முடிவுகளைத்தான் காணக்கூடும் நடைமுறையில் இது சரி வருவதில்லை. ஏனெனில், பல காரணங்களால் கற்றறிவு வளர்ந்து கொண்டே செல்லுகின்றது. ஆதலின், ஓர் சோதனையை ஒரு குறிப்பிட்ட குழுவினரிடையில். கொடுத்து, கொடுத்த சின்னாட்களுக்குப் பின்னர் அதே சோதனையை மீண்டும் அவர்களிடம் கொடுத்தால் கற்றறிவின் வளர்ச்சியின் பயனாக அவர்கள் முன்னர்ப் பெற்றதைவிடப் பின்னர் அதிகமான மதிப்பெண் பெறுவர். எனவே, ஒரு சோதனையினை முரண்படாமையைக் காண வேண்டுமாயின் அதை ஒரு


  1. 16. முரண்படாமை -Reliability.