பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மதிப்பீடும் சோதனையும்

411

முடிவுகளின் ஒருபெருங்குறை தன்வயமான[1] தீர்ப்பு ஆகும். புதிய முறைச் சோதனைகள் யாவும் ஓரளவு புறவயமுடையவை என்று கொள்ளலாம். புறவயத்திற்கும் முரண்படாமைக்கும் தொடர்பு உண்டு. புறவயத்தின் அதிகரிப்புக்கேற்ப, முரண்பாடுடைமை குறைவடையும்.

கையாளுவதில் எளிமை[2]: ஒரு நல்ல சோதனை பிறிதோர் இயல்பு அஃது எளிதில் கையாளக்கூடியதாக இருப்பது. அஃதாவது, எளிதாக வழங்கக்கூடியதாகவும், எளிதாக மதிப்பிட்க்கூடியதாகவும் இருத்தல் வேண்டும். பெரும்பாலும் சோதனைகளை ஆயத்தம் செய்தல், அவற்றைத் தக்க முறையில் அச்சிடல் ஆகியவற்றில்தான் சங்கடங்கள் நேரிடுகின்றன. தெளிவான செயற்குறிப்புகள், நல்ல தாள், தெளிவான அச்சுதாளின் அளவு, குழந்தைகளின் வயதிற்கேற்றவாறு பயன் படுத்தும் அச்செழுத்துகள், மதிப்பெண்கள் அளிப்பதில் எளிமை ஆகியவை சோதனைகளைக் கையாளும் எளிமையை அளவு படுத்தக்கூடும். சிறப்பாக, நிரப்பு சோதனைகளில் மாணாக்கர்கள் விடையளிப்பதற்கேற்றவாறு போதிய இடம் விடப்பட்டிருக்க வேண்டும். மேலும், புதிய முறைச் சோதனைகளில் அச்சுப் பிழையே இருத்தல் கூடாது. ஏனெனில், இவற்றில் இடை இடையே மாணாக்கர்களை அச்சுப்பிழைகளை நீக்கிக் கொள்ளுமாறு கூறுதல், விடையளிப்பதில் மாணாக்கர்களின் வேகத்தைக் குறைத்து, அது காரணமாக மதிப்பெண்களையும் குறைத்துவிடும். புதிய முறைச் சோதனைகளைப் படி எடுக்குங் கால் இவ்விதமான வழுக்களும், மைவிழுதலில் உள்ள குறைகளும் நேரிடாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

தேர்ச்சி அறிக்கைகள்

இது மக்களாட்சிமுறை நடைமுறையில் உள்ள காலம். அரசினரின் வரி பளு அதிகரிப்பிற்கேற்பவும், பொதுமக்கள் கல்வியறிவின் அதிகரிப்பிற்கேற்பவும், நவீன செவினங்களின் அதிகரிப்பிற்கேற்பவும் பொதுமக்கள் பொதுச்செலவினங்களைப் பற்றித் திறனாயும் திறனும் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. எனவே, இன்றைய ஆசிரியர்கள் பொதுமக்களுடன் பலவிதங்களில் தொடர்புகொள்ளுதல் ன்றியயமையாதது. பொது மக்களுடன் கொள்ளும் தொடர்பு இரண்டு நோக்கங்களைக் கொண்டது. ஒன்று: பள்ளிகளின் அவசியம், பள்ளிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள், பள்ளிகளின் சாதனைகள், பள்ளிகளின்


  1. 18. தன்வயமான-Subjective.
  2. 18. கையாளுவதில் எளிமை-Practicability.