பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மதிப்பீடும் சோதனையும்

413


இப்படிச் சராசரி மதிப்பெண்களைக் குறிப்பிடாவிட்டால், கணக்கு, தமிழ் ஆகிய இரண்டிலும் ஒரே அளவு தேர்ச்சி பெற்றி ருப்பதாகக் கருதுதல் கூடும். மேலும், சென்ற தேர்வில் கணக்கில் 45 வாங்கியிருந்து இந்தத் தேர்வில் 55 வாங்கினால், சாதாரணமாக எல்லோரும் மாணாக்கன் முன்னேற்றம் அடைந் திருப்பதாக எண்ணுவார்கள். ஆனால், சென்ற தேர்வில் வகுப்பு சராசரி 35 என்றும், இந்தத் தேர்வில் 65 என்றும் இருந் தால், சென்ற தேர்வில் வகுப்புச் சராசரிக்கு மேலாக இருந்த பையன் இப்பொழுது வகுப்புச் சராசரிக்குக் கீழாக உள்ளான் என்கிற சரியான தீர்மானத்திற்கு வர இயலும்.

பள்ளியிலிருந்து தரப்பெறும் தேர்ச்சி அறிக்கையில் மாணாக் கன் பள்ளிக்கு வந்த நாட்களின் எண்ணிக்கை, நடத்தை, படைப் பாற்றல், கைத்திறன், கையெழுத்து, தூய்மை, காலம் தாழ்த் தாமை, சமூகப்பண்பு, தான் தொடங்காற்றல் அல்லது தன்முனைவு (initiative), விளையாட்டில் காட்டும் உற்சாகம் போன்ற கூறுகள் இடம் பெறுதல் வேண்டும், திங்களுக்கு ஒரு முறை அல்லது மூன்று திங்களுக்கொரு முறை இத்தகைய அறிக்கைகளைப் பெற்றோர்களுக்கனுப்பி அவர்களுடைய கையொப்பம் பெற்றுத் திரும்பவும் வாங்கி வைக்கவேண்டும். அறிக்கையின் வடிவத்தைவிட அதை அனுப்பும் நல்லெண்ணமே மிகவும் இன்றியமையாதது. இந்த அறிக்கையில் ஆசிரியர் எழுதும் குறிப்புதான் மிகவும் முக்கியமானது. சில சமயம் ஆசிரியரின் குறிப்பு உறவினை வளர்ப்பதற்குப் பதிலாகப் பகைமையினை வளர்த்தல் கூடும். எனவே, இக்குறிப்பினை எழுதுங்கால் ஆசிரியர் பொறுப்பினை உணர்ந்து எழுதுதல் வேண்டும்.

சில சமயம் இத்தகைய அறிக்கையுடன் தனிக் கடிதமும் எழுதுதல் சிறப்பாக அமையும். மாணாக்கர் தேர்ச்சியில் குறைவோ, நடத்தையில் இழுக்கோ நேரிடும்பொழுது எழுதக் கூடிய கடிதங்களை நன்முறையில், மெருகேற்றி எழுதுதல் வேண்டும். கடிதம் எழுதுதல் ஒரு தனிக் கலை. கடிதம் சிறப்புற அமைய வேண்டுமாயின், ஆசிரியருக்குத் தக்க பயிற்சியும் பழக்கமும் வேண்டும்.

இம்முறையால் பெற்றோர்களின் ஒத்துழைப்பும் கிட்டும். மாணாக்கர்களின் தேர்ச்சியில் வளர்ச்சியும் ஏற்படும். ஆசிரியர்பெற்றோர் உறவும் வளரும். பெற்றோர்கட்குப் பள்ளிகளின் மீது ஒர் அக்கறையும் பிறக்கும்; அவர்கட்குப் பள்ளிகளின்மீது தேம்பிக்கையும் விருப்பமும் ஏற்படும். பள்ளிகளும் முன்னேற்றம் -இடையும்; தற்காலத்தில் பள்ளிகளில் காணப்பெறும் தேக்கமும் ன்ன்னிசமான அளவில் குறையவும் கூடும்.