பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆசான்

493

ரையே பெரும்பாலும் பொறுத்தவை. பட்டப் படிப்புடனே அறிவு வளர்ச்சியும் முடிவு பெற்ற ஆசிரியரும், ஒரே மாதிரியான வளைந்து கொடுக்காத நடைமுறைகளால் தன் அருட்பணி குன்றிய ஆகிரியரும் மிகவும் மகிழ்ச்சியும் திறனும் அற்ற வகுப்புத் தலைவராகத்தான் திகழ முடியும். ஆனால், தொழிலில் முதிர்ச்சி பெற்ற ஆசிரியர் தன்னுடைய தேவைகளை யறிந்து அவற்றை நிறைவு செய்து கொள்வதுடன், தான் யாருக்காகப் பணியாற்றுகின்றாரோ அக்குழந்தைகளின் வளர்ச்சிக்கும் கல்விக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ முடியும். எனவே, ஆசிரியருக்கும் ஆசிரியத் தொழிலுக்கும் இன்றியமை யாத ஒரு சில செய்திகளை ஈண்டு ஆராய்வோம்.

ஆசிரியர் - ஒரு முதிர்ந்தோர்

பொருத்தமுறுதலே கல்வி என்றும், அப் பொருத்தமுறும் செயலில் துணை புரிவதே ஆசிரியரின் அருட்பணி என்றும் பல இடங்களில் வற்புறுத்தினோம். இந்தப் பணியை நிறை வேற்றும் ஆசிரியர் முதலில் தான் சமூகச் சூழ்நிலைக்குப் பொருத்தமுறுதல் வேண்டும். ஆசிரியருக்குச் சூழ்நிலை தரும் மனநிறைவு[1]களும் மனமுறிவு[2]களும் ஆசிரியர்களுடைய வாழ்க்கை நிலைமையும் மனநலத்தையும் பாதிக்குமன்றோ? எனவே, ஆசிரியரும் நாமும் வாழும் சூழ்நிலை எத்தகையது? அதில் பொருத்தமுறுதலில் நேரிடும் இடர்ப்பாடுகள் யாவை?" என்பவற்றை ஆராய்வது இன்றியமையாததாகின்றது.

ஏனையவர்களைப் போலவே, ஆசிரியர்களும் மனிதர்களே. மனிதர்களுக்குத் தேவையானவை அனைத்தும் ஆசிரியருக்கும் தேவையே. நம்முடைய பண்டைக்காலப் பண்பாடுகள், கொள்கைகள், எண்ணங்கள், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் ஆகியவை மேனாட்டுப் பண்பாடுகள், அறிவியல் கொள்கைகள் முதலியவற்றால் மோதப்பெற்றுக் குழப்பங்களை விளைவிக்கின்றன. நவீன வாழ்க்கைக்கேற்ப ஆசிரியரின் தேவைகள் அதிகமாகின்றன. இத்தேவைகள் நிறைவு பெறாவிடில், ஆசிரியர்கள் மனநல[3]த்துடன் பணியாற்றுவது எங்ஙனம்?

வர வர மிகவும் சிக்கலாகிக் கொண்டு வரும் இன்றைய சமூகச் சூழ்நிலையில் பல்வேறு முரண்பாடுகள் நிலவுகின்றன. தன்னலம், இறுமாப்பு, அதிகார வெறி, போட்டி மனப்பான்மை.


  1. மனநிறைவு-Satisfaction.
  2. மனமுறிவு-Frustration.
  3. மனநல-Mental hygiene.