பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆசான்

421



ஆசிரியர் கற்றவண்ணமிருக்க வேண்டும் என்பதற்கு வேறு பல காரணங்களும் உள்ளன. முதலாவதாக, கற்றலில் தேங்கி, நிற்றல் மகிழ்வற்ற தன்மையையும் எரிச்சலையுமே விளை விக்கும். மேலும், ஒரே பாடங்களையும் பயிற்சிகளையும். திரும்பத் திரும்ப உரைத்து வருவதால் ஆசிரியத் தொழிலில் ஒரு சோர்வு ஏற்படும். ஆனால், ஆசிரியர் தொடர்ந்து கற்றுத் தன் அறிவைப் பெருக்கிக் கொண்டேயிருப்பின் இச்சோர்வு தலை காட்டாது; கற்பித்தல் மகிழ்ச்சியுடன் நடைபெறும்; ஆசிரியரும் உணர்வூட்டும் அதுபவத்தைப் பெறுதல் இயலும்.

கற்றலால் ஆசிரியருக்கு அறிவுப்பெருக்கம், புதிய அநுபவம் முதலியன ஏற்படுவதோடன்றி, வேறொரு நன்மையும் உண்டு. அது மாணாக்கருக்குக் கிடைப்பது. ஆசிரியர் கற்றலைப்பற்றி மாணாக்கர்கட்கு அடிக்கடிக் கூறும் அறவுரைகளைவிட, கற்பிக்கும் பொருளைவிட, அவருடைய நடத்தையே ஒர் எடுத்துக் காட்டாக அமையும். மாணாக்கர்கள் ஆசிரியரின் அடிப்படை மனப்போக்குகளை, நன்கு அறிந்து, கற்றலை நன்முறையில் மேற்கொள்வர். சதா படித்துத் தன் அறிவினைப் பெருக்கியும், அவ்வறிவினைத் தக்க முறையில் பயன்படுத்தியும் வரும் ஆசிரியரின் உற்சாகம் மாணாக்கரிடம் ஒரு தொற்றுநோய்போல் பரவி நற்பயனை விளைவிக்கும். பள்ளி ஆட்சியில் ஆசிரியர் கற்றலுக்கேற்ற நூலக வசதிகள், நூலகத்தில் இருக்கை வசதி கள் போன்றவற்றை ஏற்படுத்தித் தருதல் வேண்டும்.

கற்பித்தல் துறையிலும் எத்தனையோ அன்றாடப் பிரச்சினைகள் எழுகின்றன. இவற்றைப் பலர் கலந்து ஆராயும் வாய்ப்புகள் வேண்டும். கல்வி உளவியல் துறையிலும் எத்தனையோ ஆராய்ச்சிகள் வெளிவந்த வண்ணமுள்ளன. எனவே, இவைபற்றிய ஆராய்ச்சி இதழ்களையும் நூல்களையும் நூலகத்தில் கிடைக்கச் செய்ய வேண்டியது பள்ளி ஆட்சியாளர் களின் கடமை. ஆசிரியர். இவற்றையெல்லாம் நன்கு படித்து. தம்முடைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணல் வேண்டும். இன்று நம் நாட்டில் உயர்நிலைப் பள்ளிக் கல்விக்காக நிறுவப்பெற்றுள்ள அனைத்திந்திய ஆலோசனைக் கழகத்தின்[1] ஆதரவில் பல பயிற்சிக் கல்லூரிகளில் அமைக்கப் பெற்றுள்ள விரிவுப் பணித் துறைகள்[2] இதற்கேற்ற வாய்ப்புகளை அமைத்துத்தருகின்றன. அத்துறையினர் ஆசிரியத் தொழில்பற்றிய பல நூல்களையும் ஆராய்ச்சி இதழ்களையும் வழங்கி ஆசிரியர்களுக்குப் படிக்கும்


  1. All india Council for Secondary Education.
  2. விரிவுப்பணித்துறை-Extension Services.