பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆசான்

423



சோதனை செய்தல்:-[1] குறைகளை ஒருவாறு அறிந்த ஆசிரியர், தான் மேற்கொள்ளும் புதிய முறையைச் சோதனை செய்து பார்க்கவேண்டும். மிகவும் கவனமாக மேற்கொள்ளப் பெறும் இச் சோதனையில் பயிற்சிகளை ஆயத்தம் செய்யும் முறையில் மாற்றம் அல்லது தான் மேற்கொண்ட மூலவகைகளில் திருத்தம், அல்லது மாணாக்கர்கட்குப் பல்வேறு முறைகளில் வழிகாட்டுதலை ஒவ்வொன்றாகச் சோதித்தல் போன்றவை அடங்கும். இங்ங்னம் வேறு ஆசிரியர்கள் சோதித்துக் கண்ட முடிவுகளையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். :பத்தாம் பசலி முறைகளைக் கையாளுவதால் ஏற்படும் தீங்குகளைவிட இவ்வாறு புதிய முறைகளைக் கவனமாக மேற் கொண்டு சோதித்தலால் அதிகமான தீங்குகள் நேரிடுவதில்லை.

ஒப்பந்த-ஆயத்தம்: மேம்பாடு காணவேண்டிய துறைகளுள் ஒன்று ஒப்பந்த-ஆயத்தம் ஆகும் என்பது ஆராய்ச்சியால் கண்டறியப்பெற்ற முடிவாகும். ஆசிரியர்களே ஆயத்தம் செய்யும் ஒப்பந்தங்கள்[2] விட ஆசிரியர்-மாணாக்கர் கலந்து ஆயத்தம் செய்யப்பெறும் ஒப்பந்தங்கள் மிகவும் பயன்தரத் தக்கவை. மேல்வகுப்பு மாணாக்கர்கள் இத்துறையில் நன்முை யில் துணைபுரிதல் கூடும்.

கட்டுப்பாட்டுச் செயல்கள்: மாணாக்கர்களை அடக்கி ஒடுக்கி வைத்திராவிட்டால், அவர்கள் தலை கொழுத்து விடுவார்கள் என்பது பல ஆசிரியர்களின் கருத்து. இஃது அவ்வளவு சரியன்று. இதுகாறும் வகுப்பாட்சி எதேச்சாதிகார முறையில்[3] இருந்தது. ஆனால், கூட்டாட்சியில் அதிக நன்மைகள் ஏற்படுகின்றன என்று இன்று சோதனையால் கண்டறியப்பெற்றுள்ளது. மாணாக்கர்கட்குத் தனிச் செயல்களிலும் கூட்டுச் செயல்களிலும் பொறுப்புகளைத் தருவதால் கற்றல் செயல்களில் அவர்கள் அதிக அக்கறை காட்டுகின்றனர். இதுகாறும் மாணாக்கர்கள் ஆசிரியர்களையே சார்ந்திருந்தமையாலும், ஆசிரியர்கட்கும் மக்களாட்சி முறையை வகுப்புகளில் கையாளும் பழக்கம் இல்லாமையாலும் தொடக்கத்தில் மேம்பாடு மெதுவாகவே காணப்பெறும்; நாளடைவில்தான் அதிக மேம்பாடு எய்தமுடியும்.

மூலங்களைக் கையாளும் வகை: மூலங்களைக் கையாளும் விதமும், தனியாள் வேற்றுமைகளைக் கவனித்தலும் நெருங்கிய்-


  1. சோதனை செய்தல்-Experimentation.
  2. ஒப்பந்தங்கள்-Assignment.
  3. எதேச்சாதிகார முறையில்-Autocratic.