பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

424

கல்வி உளவியல் கோட்பாடுகள்


உறவினைக் கொண்டவை. நூல்கள், இதழ்கள், ஏனைய மூலங்கள் ஆகியவற்றைத் தனியாகவும், குழுவாகவும் படிப் பதற்குத் தேர்ந்தெடுக்கும் முறைகளில் மாணாக்கர்களுக்குத் தக்க பயிற்சிகளைத் தருதல் வேண்டும். அங்ங்னமே ஃபிலிம்கள், படங்கள் முதலியவற்றிற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

மதிப்பிடுதல்: வகுப்பறைகளில் மாணாக்கர்களின் வேலை களை மதிப்பிடுதல் முற்றிலும் ஆசிரியருடைய வேலையே. என்று நீண்ட நாட்களாகக் கருதப்பெற்று வந்தது. இதனால் மாணாக்கர்கள் யாவரும் ஆசிரியரையே சார்ந்திருக்க வேண்டிய தாக இருந்தது. இதனால் கற்போர் கற்பதன் காரணங்களை அறிந்துகொள்ள முடியாத நிலையிலிருந்தனர். கற்றலின் காரணங்களை மதிப்பிடுதலில் நோக்கங்களை முன் நிறுத்தும் பயிற்சி அளத்தல்மூலம் தேவைகளை அறிதல், மேலும் செய்ய வேண்டியவற்றிற்குத் திட்டமிடுதல் ஆகியவை பங்குபெறும். இதில் ஆசிரியர் மாணாக்கருக்கு (i) பல்வேறு பகுதிகளில் தாமாகவே நோக்கங்களைத் தீர்மானித்தல்; (ii) தம்முடைய தனிப்பட்டனவும் குழுவிற்குரியனவுமான தேவைகளைக் கண்டறிதல், (iii) இவ்வாறு கண்டறிந்த குறைகளை எதிர்ப் பதற்கு அல்லது நீக்குவதற்கு உரிய கற்கும் செயல்களைப் பற்றிய திட்டங்களை வகுத்தல் என்ற முறைகளில் துணை செய்யலாம்.

ஆசிரியர்-ஆசிரியர் உறவுகள்: பழைய காலத்தில் பெரும் பாலான ஆசிரியர்கள் தம்முடைய தொழில் வளர்ச்சியும் தோழில்பற்றிய செயல்களும் வகுப்பறையுடன் நின்று விடுகின்றன என்று கருதினர். ஆசிரியரின் வகுப்பறைச் செயல்கள் மிகவும் இன்றியமையாதவை என்பது உண்மையே. எனினும், இன்று வகுப்பறைக்குப் புறம்பேயும் ஆசிரியர்கள் தம் தொழிலில் வளர்ச்சி பெறக்கூடிய ஆற்றல் தன்மைகள் இன்னும் அதிகமாக உள்ளன என்பதை அறிந்துள்ளனர். அவற்றுள் ஒன்று ஆசிரியர். ஆசிரியர் உறவு.

நவீன பள்ளியின் முன்னேற்றம் பெரும்பாலும் ஆசிரியர் களின் ஒத்துழைக்கும் விருப்பத்தையும் திறனையும் பொறுத்தது என்பது குன்றின் மேலிட்ட விளக்கு போலாம். பல துறைகளில் ஆசிரியர்களின் ஒத்துழைப்பு மிகமிகத் தேவை. அவற்றுள் ஒன்று கல்வி ஏற்பாட்டினை[1] அடிக்கடி மாற்றுதல் ஆகும். ஒரு மாணாக்கனின் கல்வி அநுபவங்கள் தொடர்ந்து ஐக்கியப் படுத்தப்பெறாவிடின், ஓர் ஆசிரியர் வழிகாட்டும் முறைகள்


  1. 22. கல்வி ஏற்பாடு-curriculum.