பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆசான்

425


இன்னொரு ஆசிரியர் வழிகாட்டும் முறைகளுடன் முரண்பட்டு நிற்கும். சில பள்ளிகளில் ஒரு மாணாக்கன் செய்ய வேண்டிய வீட்டுவேலையை எண்ணும்பொழுது இவ்வுண்மை தெளிவாகும், ஒவ்வொரு ஆசிரியரும் தம் பாடமே முக்கியமென்று கருதி மாணாக்கர் நிலையையும், அவன் வீட்டில் பெறும் வசதிகளையும், பிற ஆசிரியர்கள் தரும் வீட்டு-வேலையின் அளவினையும் சிறிதும் கருத்தில் கொள்ளாது அளவுக்கு மீறிய வீட்டு வேலையைச் செய்து வரும்படி ஏவுகின்றனர். இதனால் மாணாக்கனுக்குத் தேவையான ஒய்வு, புறச் செயல்கள், துரக்கம் முதலியவை இல்லாமற் போகின்றன.

மாணாக்கரின் வேலைகளுக்கு மதிப்பெண் வழங்குதல். மேல் வகுப்புக்கு மாற்றுதல், பெற்றோர்கட்கு அறிக்கைகள் அனுப்புதல் போன்ற பிரச்சினைகளை ஆராய்வதற்கும் ஆசிரியர் களின் உறவு மிகவும் இன்றியமையாதது. பள்ளி வேலை நிரலில் தொடர்ந்தாற்போல் மேம்பாடு காண வேண்டுமாயின், கற்பித்தல்.கற்றல் நிலைமைகளின் காரணங்களிலும் திட்ட மான நோக்கங்களிலும் படிப்படியாக மாற்றங்கள் செய்யப் பெறுதல் வேண்டும். இதற்கு ஆசிரியர்களின் கூட்டுறவு மிகவும் இன்றியமையாது வேண்டற்பாலது. பயிற்சிப் பள்ளி களிலும் கல்லூரிகளிலும் ஆசிரியர்கள் பயிற்சி பெறுங்கால் இவ்வொத்துழைப்பு மிகவும் அவசியம் என்பதை அதிகமாக வற்புறுத்துவதில்லை. பல ஆசிரியர்கள்-ஆசிரியத்துறை ஜாம்ப வான்கள் பலர்-அடிக்கடி கலந்து ஆய்வதால் பல நன்மைகள் விளைகின்றன என்ற சமூகக் கல்வி உளவியலின் முக்கிய கூறினை அங்கு எடுத்துக்காட்டுவதில்லை. தற்பேறு வசமாக, இன்று அதில் ஒரு விழிப்பு ஏற்பட்டிருக்கின்றது. கல்வி முன்னேற்றத்திற்கு இத்தகைய ஒத்துழைப்பும் கலந்தாய்தலும் பெருநன்மையை விளைவிக்கின்றன. மூன்று முறைகளில் இக் கூட்டுறவை வளர்க்கலாம்.

(i) தொழிலிலிருந்து கொண்டே பெறும் பயிற்சி: ஒரு பள்ளி யிலுள்ள ஆசிரியர்களிடையேயும், பல பள்ளிகளின் ஆசிரியர் களிடையேயும் கூட்டுறவை வளர்ப்பதற்கு இத்தகைய பயிற்சி மிகவும் வேண்டற்பாலது; விரும்பத்தக்கது. தனிப்பட்ட ஆசிரியருக்கும் பள்ளிக்கும் அஃது எவ்வடிவத்தில் உருப்பெற வேண்டும் என்பது அதில் பங்கு பெறும் ஆசிரியர்களின் தரத்தை யும், அவர்கள் காட்டும் அக்கறையையும் பொறுத்தது. என்றாலும், அதன் சிறப்பியல்புகளைச் சிறிது குறிப்பிடலாம்.

முதலில் அது பள்ளி நடவடிக்கைகளில் திட்டமான மேம்பாடு களைக் காண்பதற்கு ஆசிரியர்களின் ஐக்கிய முயற்சி என்பதாகக்