பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆசான்

435


பாதிக்கின்றன. சமூகத்தை விட்டு நம்மால் தனியாக வாழ முடியாது. அதனால்தான் தனிச்சிறையிலிடுவது கடுந்தண்டனையாக கருதப்பெறுகின்றது. ஆசிரியரும் மனிதரே; ஆதலால் ஆவாசமுக உறுப்பினர்களில் ஒருவராவார்; அவரிடமும் சமூக உணர்ச்சி உண்டு. சமூக உணர்ச்சியைக் குழந்தைகளிடம் வளர்க்கும் பொறுப்பு ஆசிரியருடையது. பள்ளியில் குடிமைப் பயிற்சி அளிக்கப்பெறுவது இக்காரணம் பற்றியேயாகும். சமூகப் பண்பு ஆசிரியரிடம் நிறைந்திருந்தால்தான் மாணாக்கர்கள் 'சைப் பின்பற்றுவதாலும், ஒத்துணர்ச்சியாலும் அப்பண்பைத் தாங்களும் பெற முடியும். அவர் பிற ஆசிரியர்களுடனும் சிறுவர்களுடனும் பழகுவது அவர்களுக்கு முன்-மாதிரியாகும். எனவே ஆசிரியப் பணி மிகவும் வெற்றியடையவேண்டு மாயின், ஆசிரியரின் சமூக நடத்தை சிறப்புடன் மிளிர வேண்டும் என்பதாகின்றது.

முதலில் குடும்பம்தான் குழந்தையிடம் சமூகப் பண்பை வளர்க்கும். ஒரு குடும்பத்தில் பல குழந்தைகளிருப்பின் அவர்களுக்கேற்றவாறு குழந்தை பொருத்தமுறக் கற்றுக்கொள்கின்றது. அக்கம்பக்கத்திலுள்ள பிற குழந்தைகளுடன் இக் குழந்தை பழகுவதால் இச்சமூகப் பண்பு மேலும் வளர்ச்சியடை கின்றது. குழந்தையின் குடும்பத்தில் இப்பண்பு நன்முறையில் வளர வாய்ப்பு இராவிட்டால் பள்ளியிலாவது இப்பண்பு நன்முறையில் வளர்க்ககப்பெறுதல் வேண்டும். இதற்குப் பல வாய்ப்புகள் பள்ளியிலுள்ளன. பிற மாணாக்கர்களுடன் பழகுதல், அவர்களுடன் கூடிவிளையாடுதல், வேலை செய்தல், பிற மாணாக்கருடைய புகழ்ச்சி இகழ்ச்சி, அவர்களுடன் போட்டி போடுதல், ஒத்துழைத்தல் போன்றவை குழந்தையிடம் சமூக உணர்ச்சியை உறுதிப்படுத்தி நல்வழிகளில் வளர்க்க வாய்ப்பளிக்கின்றன. சிறிது காலமாகவே சமூக உணர்ச்சியை வளர்க்கவேண்டும் என்று கல்வி அறிஞர்கள் கூறி வருகின்றனர்; அதனைச் சிறப்பாக வற்புறுத்துகின்றனர். இதுகாறும் கல்வி உளவியலை மட்டிலும் பயின்ற ஆசிரியர்கள் இப்பொழுது சமூக வியலையும் சேர்த்துப் பயில்கின்றனர். காரணம், கற்றல் சமூகச் செயலாக இருப்பதுதான். பிறரிடமிருந்தோ பிறருடனோ கற்கின்றோம். பிறருடைய பாராட்டும் இகழ்ச்சியும் கற்றலைப் பாதிக்கின்றன. ஆசிரியர்-ஆசிரியர் ஊடாட்டம்,[1] ஆசிரியர். மாணாக்கர் ஊடாட்டம், மாணாக்கர்-மாணாக்கர் ஊடாட்டம் ஆகியவை கற்றலின் அளவை அறுதியிடுகின்றன. ஆசிரியர் சொல்வதைக் கேட்டுப் பின் பற்றலை விட அவருடைய -


  1. 30. ஊடாட்டம்-Interaction