பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

436

கல்வி உளவியல் கோட்பாடுகள்


செயலையே மாணாக்கர் கவனித்துப் பின்பற்றுகின்றனர். ஆகவே, ஆசிரியரின் பொறுப்பு அதிகமாகின்றது. இதனால் தான் சமூகம் ஆசிரியரிடம் உயர்ந்த அறநெறித்தரத்தை எதிர் பார்க்கின்றது. குழந்தையின் நலனையெண்ணி அதற்குப் பாலூட்டும் தாய் பத்தியத்தை அநுசரிப்பது போல, ஆசிரியரும் தம்மிடம் பயிலும் மாணாக்கர்களின் நலனை யெண்ணிப் பல துடிப்புகளை அடக்கிக்கொண்டு பல விரதங்களை அதுட்டிக்க வேண்டியுள்ளது. உண்மையாசிரியர்கள் பலர் விரதியர்களாகவே வாழ்கின்றனர்.

நாம் ஒவ்வொருவரும் பல்வேறு சமூகங்களின் உறுப் பினர்கள். ஒவ்வொருவருடைய குடும்பம், தொழில், சமயம், பொழுதுபோக்குக் கழகம், அரசியல் கட்சி வேறுபட்டவை. அவைகளில் ஈடுபடுங்கால் பழைய வழக்காறுகளை ஏற்றுக் கொள்ளுகின்றோம்; புதிய பழக்கவழக்கங்களை ஆக்கிக் கொள்ளவும் முயலுகின்றோம். சமூகத்துடன் அன்பாகவும் இனங்கியும் வாழ பள்ளிகள் பயிற்றுகின்றன. பள்ளி வெளியுலகத்தைவிட சிக்கலற்ற நிலையமாகும். பள்ளியில் அநுபவமும், முதிர்ச்சியும், மதிப்பும் பெற்ற பள்ளி ஆசிரியர்கள் மாணாக்கர்கட்கு வேண்டிய துணை புரிகின்றனர். வெளியுலகில் இத்தகைய வாய்ப்பு கிடைப்பது அரிது. குழு வாழ்க்கை வாழ்வதற்குப் பள்ளியைவிடச் சிறந்த நிலையம் வேறொன்று இல்லை. தற்காலப் பள்ளியே மக்களாட்சி முறைப்பற்றிய பயிற்சிக்கு ஏற்ற இடமாகும். பள்ளிகள் குழந்தைகளிடம் தன்னம்பிக்கை, உற்சாகம், குழு உணர்ச்சி, ஒத்துழைப்பு, வெற்றி மனப்பான்மை போன்ற சமூகப் பண்புகளை வளர்க்கின்றன. அன்பு, பாராட்டு, பொறுப்பு, உரிமை, தீரச்செயல்களுக்கு வாய்ப்பு போன்றவை பள்ளிகளில் நிலவுகின்றன. இவை யாவும் மாணாக்கர்களிடம் வளர ஆசிரியர் நல்ல முறையில் கண்காணிப்பு செய்து வருகின்றார்; இஃது ஆசிரியரின் சமூகப் பொறுப்பாகவும் ஆகின்றது.

ஆசிரியரின் முக்கியத்துவம்

மேனாட்டு அறிஞர் ஒருவர் இவ்வாறு எழுதுகின்றார்: :உயர்நிலைப் பள்ளிக் கல்வியில் எல்லாவற்றையும்விட ஆசிரியரே மிகவும் செல்வாக்குள்ள கூறு ஆகும். கல்வி ஏற்பாடு[1] அமைப்பு,[2] தளவாடங்கள்[3] ஆகியவை முக்கியவையாயினும்,


  1. 31.-Curriculum.
  2. 32. அமைப்பு-Organization.
  3. 33. தளவாடங்கள்-Equipment.