பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

கல்வி உளவியல் கோட்பாடுகள்


களில்[1] உண்டாகின்றன. இவற்றில் சுரக்கும் நீர்கள் கண்ணிர்ச் சுரப்பிகள், உமிழ்நீர்ச் சுரப்பிகள், கல்லீரல் கணையம் ஆகியவற்றில் சுரக்கும் நீர்கள் தூம்பு அல்லது குழல் வழியாகச் சொல்லுவது போலன்றி நேரே குருதி யோட்டத்திற்குள் சென்று உடலின் எல்லாப் பகுதிகளிலும் பரவுகின்றன, அடித்தலைச் சுரப்பி,[2] புரிசைச் சுரப்பி [3], மாங்காய்ச் சுரப்பி [4] போன்றவை தூம்பிலாச் சுரப்பிகளாம். இவற்றில் ஊறும் சாறுகள் உள்ளக் கிளர்ச்சிகளின் இடைவினைகளுக்கு நேரான தொடர்புள்ளவை; இவை உடல் நிலையையும் உள நிலையையும் அதிகமாகப் பாதிக்கின்றன.

உடலின் வெவ்வேறு உறுப்புகளைத் தனித்தனியே பிரித்துக் கற்றல் உளவியலாருக்குப் பயன்பட்ட போதிலும், அவர்கள் மனித உயிரியை ஒரு முழு இயக்கத் தொகுதியாகவே கருதுகின்றனர்.

“பொருத்தப்பாட்டின் கோலங்கள்”

[5] ஒரு குழந்தை சூழ்நிலையில் இயங்குவதற்கும் வளர்ந்த ஒருவர் சூழ்நிலையில் இயங்குவதற்கும் அதிக வேற்றுமை உண்டு. குழந்தையின் நடத்தை எளிதானது, வளர்ந்தவரின் நடத்தைக் கோலம் மிகவும் சிக்கலானது. ஒர் உயிரி சூழ்நிலையினாலோ தனக்குள்ளோ ஏற்படும் ஒரு நிலைமைக்குத் தன்னைப் பொருத்தமுறச் செய்து கொள்ளும் செயலின் தொடர்ச்சியே நடத்தைக்கோலம் என்று வழங்கப் பெறுகின்றது. பொருத்தமுறுதல் பல திறப்பட்ட செயலாகும். ஒரு பளிங்கில் பல பட்டைகள் காணப்பெறுவதுபோல், குழந்தை யிடமும் பல கூறுகள் காணப்பெறுகின்றன. குழந்தை பல்வேறு சூழ்நிலைகளில் பொருத்தப்பாடு அடையும்பொழுது இந்தக் கூறுகள் ஒன்றையொன்று தழுவிக்கொண்டும் ஒன்னறயான்று பாதித்துக்கொண்டும் உள்ளன. ஒவ்வொன்றிலும் ஏற்படும் மாறுபாடுகளைத் தனித்துக் கவனித்தால்தான் இவற்றை நன்கு அறியலாம். எனினும், குழந்தையோ வளர்ந்தவரோ இவை அனைத்தின் சேர்க்கை என்பதை நினைவில் இருத்த


  1. 30. தூம்பிலாச் சுரப்பிகள்-Ductiess glands.
  2. 31. அடித்தலைச் சுரப்பி-Pitaitary gland.
  3. 32. புாிசைச்சரப்பி-Thyroid gland.
  4. 33. மாங்காய்ச் சுரப்பி-Adrenal gland.
  5. 34. பொருத்தப்பாட்டின் கோலங்கள்-Pattern of adjustmen