பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

கல்வி உளவியல் கோட்பாடுகள்


கட்டப்பெற்றுக் கிடப்பதைப் போலவே நரம்பும் பல இழைகள் சேர்ந்து ஒர் உறையில் அமைக்கப்பெற்றுள்ளது. இவ் விழைகள் தாம் நரப்பங்கள். நரம்பு மண்டலம் பலகோடி நரப்பங்களால் ஆனது. நமது உடலில் 9,200,000,000 நரப்பங்கள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

நரப்பத்தில் மூன்று பகுதிகளைக் காணலாம். படத்தி லுள்ளதை விட தரப்ப விழுது இன்னும் நீளமானது. சாம்பல் நிறமாகவுள்ளது. அணுவறை"[1] அல்லது அணு உடல். இது உள்ளணுவோடு [2]சேர்ந்துள்ளது. இதிலிருந்து தான் நரம்பு ஊட்டம் பெறுகின்றது. அணுவறையிலிருந்து நீண்ட கம்பிகள் போன்ற பகுதி வெண்ணிற உறையால் மூடப்பெற்றுள்ளது. ஒவ்வொன்றும் இரண்டிலிருந்து மூன்றடி


படம் 2: நரப்பங்கள், கரப்ப விழுதுகள், நரப்பக் கிளைகள் ஒரு கூடல்வாய் ஆகியவற்றைக் காட்டும் கரப்பங்கள்.

நீளம் வரை இருக்கும். இப் பகுதியை நரப்ப விழுது [3]என வழங்குவர். நரப்பத்தின் மெல்லிய மயிரிழை போன்ற பகுதி நரப்பக்கிளைகள்'[4] என வழங்கப்பெறும். இரண்டு நரப்பங்கள் நெருங்குவதில் ஒரு தனித் தன்மை உண்டு. ஒரு நரப்பத்தின் தரப்பக்கிளைகள் மற்றொரு நரப்பத்தின் நரப்ப விழுதுடன் நெருங்குகின்றன. இவ்வாறு நெருங்குமிடம் கூடல்வாய் [5]என வழங்கப்பெறும். நரப்பகளின் முடிவுப் பகுதிகள் ஒன்று சேர்வதில்லை என்பது கவனித்தற்பாலது. இஃது ஒரு நூதனப்பண்பு. நரம்புகளினூடே செல்லும் ஆற்றலை ஒருவித மின்னாற்றால் என்று கூறுவர். இஃது ஒரு நரப்பத்திலிருந்து

-


  1. 43.அணுவறை-Cell body.
  2. 44.உள்ளணு-Nucleus.
  3. 45. நரப்ப விழுது-Akon.
  4. 46.நரப்பக்கிளைகள்-Dendrites.
  5. 47.கூடல்வாய் -Synapse.