பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

மனிதனும் சூழ்நிலையும்

39



முதுகு நடுநரம்பு : எளிய செயல்களைக் கொண்ட இது தான் மிக மிகத் தொடக்க நிலையில் உள்ளது, இஃது ஒன்று தான் கீழ்நிலையிலுள்ள முதுகெலும்பிகளின் நரம்பு மண்டல மாகும். இது முகுளத்தில் தொடங்கி முதுகெலும்பு வரிசை யென்னும் மூட்டுள்ள எலும்புக் குழலுள் அமைந்த நரம்புத் தொகுதியாகும். இது நீண்ட கயிறு போன்றது. இதில் முன்னும் பின்னுமாக இரண்டு வெடிப்புகள் உள. இதன் உட்பாகம் நரம்பணுக்கள் இருப்பதனால் சாம்பல் நிறமானது; வெளிப் புறம் நரம்புக் கம்பிகள் அடங்கியிருப்பது பற்றி வெண்ணிறமாக வுள்ளது. இந் நரம்புத் தொகுதியில் 30 இணைக்கு மேலான முதுகு வெளி ந ர ம் பகம்இதனைப் புகுவாய்களோடும் இயங்குவாய்களோடும் இணைக் கின்றன. மேலே மூளைக்குச் செல்பவை உட்செல் நரம்பு களாகும்; மூளையிலிருந்து கீழே வருபவை வெளிச்செல் நரம்பு களாகும். இந்நடுநரம்பு தன் வலிமையினால் உட்செல் நரம்பு களையும் வெளிசெல் நரம்பு களையும் இணைக்கும் ஒரு மை யமுமாகும். நடுநரம்பு மண்ட லத்திலிருந்து நமது உடல் முழு வதும் பரவியுள்ள நரம்புகளைப் படத்தில் காண்க (படம்-4).

முதுகு நடுநரம்பின் வலிமை யால் மடக்குச் செயல்கள் அல் லது மறிவினைகள்' நடைபெறு கின்றன. எடுத்துக்காட்டாக, நம் புறங்கையில் ஒருவர் ஊசியால் படம் 4: நடுநரம்பு மண்டலம். குத் தி னால் வெடுக்கென்று உடம்பு முழுவதும் நரம்புகள் கையை இழுத்துக் கொள்ளுகின் றனபரவியிருப்பதைக் காட்டுவது. றோம் (படம்-5). இதற்கு யாதொரு யோசனையும் செய்வதில்லை. இது முதுகு நடு நரம்பின் செயலால் நடைபெறுகின்றது. சில உயிர் வகைகளின்

52. முதுகெலும்பிகள்-Wertebrates. 53. qp@j6IT þ-Medulła oblongata. 54. மடக்குச் செயல் அல்லது மறிவினை.Reflex action,