பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனிதனும் சூழ்நிலையும்

41


அனுப்பும் ஊழி நிலையமாகவும் செயற்படுகின்றது; அஞ்சல் நிலையமாக அமைகின்றது. (படம் 5.) கையின் பின்புறமிருந்து புறத்தசை வரையிலும் உள்ள ஒரு நரம்பினைக் காட்டுகின்றது. கை ஏற்கும் தூண்டலுக்கேற்ற துலங்களை புயத்தசை நிறை வேற்றுகிறது என்பதைப் படம் விளக்குகின்றது.

நமது நடத்தைகள் யாவும் இம்மாதிரியான மடக்குச் செயல்கள் என்று கூறுவதற்கில்லை. மடக்குச் செயல்கள் பெரும்பாலும் நமது நனவு நிலையின் ஆட்சிக்குட்பட்டவை அல்ல. எடுத்துக்காட்டாக, நமது கண்ணிற்கு நேராகக் கூர்மையான குச்சியை யாராவது வேகமாக நீட்டினால் கண்ணிமைகள் தாமாக மூடிக்கொள்ளும். இந் நடத்தையில் நம் சிந்தனை மடக்குச் செயலை நடத்துவதாகக் கருதமுடியாது. கண்ணைத் திறந்து வைத்துக்கொண்டிருக்க வேண்டும் என்று எவ்வளவுதான் நாம் கருதினும் நம்மையறியாமலேயே அம் மடக்குச் செயல் நிகழ்ந்துவிடுகின்றது. மேலும் சுவாசித்தல் முதலிய மற்ற செயல்களில் நமது நினவு சிறிதும் பங்கு பெறுவதில்லை. ஆதலின் நம் நடத்தையில் வெறும் மடக்குச் செயல்களுக்கும் மேலான ஒருவகை உண்டு. இதில் பலவித மடக்குச் செயல்கள் ஒன்று சேர்ந்து இயங்குகின்றன. இவை நமது நனவு நிலையின் ஆட்சிக்கு உட்பட்டவை. இம்மாதிரி நடத்தையை 'இயல்பூக்க நடத்தை' என்பர்.

முகுளம் : முதுகு நடுநரம்பிற்கு மேற்புறமாகவும் பெரு மூளைக்கு அடியில் பின்புறத்திலும் முகுளம்[1] எனப்படும் நடு முடிச்சு அமைந்துள்ளது. இது சிறு கோளவடிவமானது; மிகவும் முக்கியமானது. முதுகு நடுநரம்பைப் போலவே இதுவும் ஒரு முக்கியப் பொருத்தப்பாட்டு மையமாகும். ஆயினும், இதன் முக்கிய வேலை முதுகு நரம்புத் தொகுதியை மேல் மையங் களோடு இணைப்பதே. அன்றியும், சுவாசித்தல், இதயத் துடிப்பு, குருதியோட்டம், செரிமானம் சம்பந்தமான மறிவினைகளுக்கெல்லாம் முகுளமே காரணமாகும். தலையிலுள்ள புலன்கள், தசைகள் பற்றிய மடக்குச் செயல்களுக்கும் இதுவே இருப்பிடமாகும். இதன் வழியாக மேலும் கீழும் செல்லும் நரம்புகள் வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் சென்று உடலின் இருபாகங்களையும் இணைக்கின்றன.

சிறுமூளை [2]: இதைப் பின்தலை மூளை என்றும் வழங்குவர். இது பெருமூளையின் பின்புறத்தில் பாலத்திற்கும்


  1. முகுளம்-Medulla oblongate.
  2. சிறுமூளை -Cerebellum.