பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

கல்வி உளவியல் கோட்பாடுகள்



நெற்றிப்பிரிவு 84; பின்பக்கமாகவுள்ளது மண்டைப் பக்கப் பிரிவு 8%; தலையின் பின்பக்கமுள்ளது பிடரிப்பிரிவு 8; காதுக்கு மேலுள்ளது பொட்டுப்பிரிவு . ஒவ்வொரு பிரிவும் ஒவ்வொரு வேலையைச் செய்து வருகின்றது. ஐம்பொறிகளாகிய பார்வை, கேள்வி, ஊறு, நாற்றம், சுவை ஆகிய ஒவ்வொன்றும் மூளையில் ஒவ்வொரு பகுதியையுடையது. ஆயினும், மூளை ஒன்றாகவே செயற்படுகின்றது என்பதை நாம் அறிதல் வேண்டும். எடுத்துக் காட்டாக - நாம் ஒன்றினைப் பார்க்கின்றோம்; அதே சமயத்தில் கேட்கின்றோம், நு கர்கின்றோம், சுவைக்கின்றோம், எனவே, பல பகுதிகளும் ஒருங்கு இணைந்தே செயற்படுகின்றன என்பது இதனால் உறுதிப்படுகின்றது.

மேற்சுட்டிய புலன் எல்லைகளைத் தவிர, இயக்க எல்லை என்ற ஒன்றும் உண்டு. இது நெற்றிப்பிரிவில் உள்ளது. கால், உடல், கை, முகம், தலை என்ற வரிசையில் இயக்கங்கள் அவ்விடத்தில் அமைந்துள்ளன. மேலே தோன்றுவது காலின் இயக்கம்; கீழேதோன்றுவது தலையின் இயக்கம்; இடையே காண்பது உடலின் மற்றப் பாகங்களின் இயக்கம்.

இவை தவிர சிலபகுதிகளில் இயைபு நரம்புகள் உள்ளன. நம் அநுபவங்களை இயைபுறுத்தலில் இந் நம்புகள் ஈடுபடு கின்றன. பெருமூளையே நனவுக்கு இருப்பிடம், இதையே :மேல் மையம் '1' என்று வழங்குவர். சிறுமூளையையும். முதுகு நடுநரம்பையும் கீழ்மையங்கள் என்பர். விருப்பச்செயல்கள் : யாவும் மேல் மையத்தாலும், அனிச்சைச் செயல்கள் யாவும்: கீழ்மையங்களாலும் ஆளப்பெறுகின்றன.

வெளிநரம்பு மண்டலம் : இதில் மண்டை நரம்புகள், முதுகுவேர்கள், நரம்பு உடல்கள் ஆகியவை சேர்ந்துள்ளன, பொறியின் செயல்கள் பல பாதைகளின் வழியாகப் பரந்து நடுநரம்பு மண்டலத்தின் பல பகுதிகளுக்கும் செல்லுகின்றன

64. ©g sögöul Piflas-Frontai lobe. 65. Lossers»–li l-iż GL 1stfløj-Parietal lobe.

66. L3-sfilii?flay-Occipital iobe. 67. Quito Qūl offlas-Temporal lobe. 68. Gaoul fissiblyāār Association nerves. 69. Bara-Consciousness. 70. Gadsbadeouth-Higher centre. 71. கீழ்மையங்கள்.Lewer CGIẾTES.

T2. sjø Lié63 uéssir-Voluntary actions. 73. அனிச்சைச் G&Lääär-involuntary actions.