பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனிதனும் சூழ்நிலையும்

49

நெஞ்சுக்குழைச் சுரப்பி[1]: இது குழந்தைப் பருவத்தில் காணப்பெறும், மூச்சுக் குழலின் முன்னால் இதயத்திற்கு மேலே அமைந்துள்ளது. இது மற்றைய சுரப்பிகள் முற்றாதபடி அடக்கியாள்கின்றது. அதனால் குழந்தையின் உடல் வளர்கின்றது.குழந்தை நிலை நீங்கியதும் இது சுருங்கி விடுகின்றது.

மேல்தலைச் சுரப்பி:[2] இது மூளையின் நடுவில் உள்ளது. இச் சுரப்பி பாலறிகுறிகளை வளர்க்கும் மாங்காய்ச் சுரப்பியினைக் கட்டுப்படுத்துகின்றது. அதனால், இளமை நீங்கும் வரை உடன்நிலைப் பாலறிகுறிகள் தோன்றுவதில்லை. குழந்தையின் ஏழெட்டு யாண்டுகளுக்குப்பின் இச் சுரப்பி சுருங்கத் தொடங்குகின்றது. அப்பொழுது புணர்ச்சி என்ற இயற்கைச் செயல் நிலையும் வளர்ந்து முற்றத்தொடங்கும்.

பால்நிலைச் சுரப்பிகள்:[3] ஆணிடம் விரைகளாகவும்,[4] பெண்ணிடம் சூற்பைகளாகவும்[5] காணப்பெறுபவை. இவற்றை உடலியலார் பொதுவாக இனகோளங்கள்[6] என்றும் வழங்குவர். பிறந்த நாள் தொட்டுக் குமரப் பருவம் வரையிலும் இவற்றில் யாதொரு செயலும் நடைபெறுவதில்லை; ஆகவே, குழந்தையின் நடத்தையை இவை பாதிப்பதில்லை.

பொதுவாக இத் தூம்பிலாச் சுரப்பிகள் மனவெழுச்சிகளுடனும் உடல் வளர்ச்சிகளுடனும் நெருங்கிய தொடர்புடையவை. உள்ளக் கிளர்ச்சிப் பொருத்தப்பாடும் வளர்ச்சியும் இவற்றைப் பொறுத்தவை. இச் சுரப்பிகள் ஒன்றோடொன்று இணைந்தே செயற்படுகின்றன. இவை யாவும் அடங்கிய எண்டோகிரீன் மண்டலத்தைப்[7]பற்றிய உறுதியான உண்மை கள் யாவும் ‘அறிதோறும் அறியாமை கண்டநிலை’ யிலுள்ளன.

பொறிகள்

பொறிகளின் முக்கியத்துவம்: எல்லா மனச் செயல்களும் பொறிகளின் தூண்டல்களால் நடைபெறுகின்றனவாதலின்,





த.உ.கோ-4


  1. 82. நெஞ்சுக் குழைச் சுரப்பி-Thymus gland.
  2. 83. மேல்தலைச் சுரப்பி-pineal gland.
  3. 84.பால்நிலைச் சுரப்பிகள்-Sex glands.
  4. 85.விரைகள்-Testes.
  5. 86.சூற்பைகள்-Ovaries.
  6. 87.இன கோளங்கள்-Gonads.
  7. 88.எணடோகிரீன் மண்டலம்-Endocrine system.