பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

கல்வி உளவியல் கோட்பாடுகள்


உள்வியலில் பொறிகள் முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. நாம் செய்வன யாவும் நாம் பெறும் நிலையும் பொறிகளைப் பொறுத்தே அமைகின்றன. நம்முடைய அறிவு முழுவதும் நேர்முறையிலோ அன்றி நேரல் முறையிலோ பொறி வாயிலாகப் பெறும் செய்திகளின்மீது எழுந்ததே யாகும். வெறும் புலனுணர்வு மட்டிலும் அறிவன்றெனினும், புலனுணர் வினை அடிப்படையாகக் கொண்டே அறிவு மலர்கின்றது. நாம் பெற்றுள்ள பொறிகளின் வகைகளைப் பொறுத்தே உலகை உணர்கின்றோம்; நம்மையும் உணர்கின்றோம். மக்கள் ஐம்பொறிகளைவிடக் குறைவான பொறிகளைப் பெற்றிருப்பின் அவர்கள் இவ் வுலகைப்பற்றிக் கொள்ளும் கருத்தினையும், அவர்களே வானொலி அலைகளையும், புதிர்க்கதிர்களையும்[1] அண்டக்கதிர்களையும்[2] உணரக்கூடிய அதிகமான பொற களைப் பெற்றிருப்பின் அவர்கள் இவ்வுலகினைப் பற்றிக் கொள்ளும் கருத்தினையும் சிந்தித்துப்பாருங்கள். நம் வாழ்க்கைக் கோலங்கள் பல பொறிகள் இணைந்தியற்று வதனாலேயே சாத்தியமாகின்றன.

பொறிகளின் எண்ணிக்கை : மனிதனுக்கு எத்தனைப் பொறிகள் உள என்பதை உளவியலார் இன்னும் திட்டமாக வரையறுக்கவில்லை. ஆயினும், வழிவழி வந்துள்ள சுவை, ஒளி, ஊறு, ஒசை, நாற்றம் என்னும் ஐம்புலன்களுக்கு மேலாக வேறு சில புலன்களும் உள என்பது மட்டிலும் உறுதி. ஐம்பொறிகளின் வாயிலாகச் சூழ்நிலையைப் பற்றி நாம் அறிந்து கொள்ளலாம், ஆனால், நம்மைப்பற்றி நமக்குக் கூறும் பொறி களும் உள. ஒருவகைப் பொறிகள் நம் உடலின் பல பாகங்களின் அசைவுகளையும், நிலைகளையும் நமக்குக் காட்டுகின்றன. வேறு சில பொறிகள் நம் உள்ளுறுப்புகளின் நிலையை நமக்குக் காட்டவேண்டிப் பாலுணர்ச்சி, பசி போன்ற இயல்பூக்கங்களை எழுப்புகின்றன.

மனிதன் பொருத்தப்பாட்டுச் சிறப்பு உடையவன். பொருத்தப்பாட்டு முறையில் ஒரு பொறியின் செயலை மற்றொன்று மேற்கொள்ளவும் இயலும். குருடர் கைவிரல் களால் படிக்கக் கற்றுக்கொள்கின்றனர்; செவிடர் படிப்பதில் ஆறுதல் பெறுகின்றனர். மணம் என்ற சுவையைத் துய்க்க இயலாதவர்கள் வாழ்க்கையில் வேறு வழிகளை இயற்றிக் கொள்ளுகின்றனர்.


  1. புதிர்க் கதிர்கள்-X-rays.
  2. அண்டக்கதிர்-Cosmic rays..