பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனிதனும் சூழ்நிலையும்

57


பின்னர் ஒளிக்கதிர்கள் கண்.மணி எனப்படும் வில்லையை ஊடுருவிச் சென்று கண்.திரை எனப்படும் கட்புலப்படாமில் விழுகின்றன; உடனே அங்கத் துடிப்புகள் உண்டாகின்றன. அத் துடிப்புகள் பார்வை நரம்புகளின்மூலம் மூளைக்குக் கொண்டு செல்லப் பெறுகின்றன. ஒளிக்கதிர் கண்ணுக்குள் சென்று பிம்பம் விழுவதைக் காட்டும் படத்தில் (படம்.14) இப் பிம்பம் தலைகீழாக இருப்பதுபோல் தோன்றுகின்றது. ஆயினும் மூளைக்கு இவ்வாறு மேல் கீழ் என்று இல்லை, அது வெளியில் பொருள் எந்நிலையில் உள்ளதோ அந் நிலையிலேயே காணச் செய்கின்றது. அங்ங்னம் காண்பதற்கேற்ற நரம்பு அமைப்புகள் கண்ணில் அமைந்துள்ளன. கற்றலால் நம் பார்வைப்புலக் காட்சிகள் திட்டம் பெறுகின்றன.

பிம்பத்தை மையப்படுத்துதல் : மானிடக் கண்ணின் வில்லை (கண்.மணி) ஒளிப்படப் பெட்டியின் வில்லையை விட நெகிழ் வானது. ஒளிப்படப் பெட்டியில் தெளிவான பிம்பம் பெற வேண்டுமானால் அதிலுள்ள துருத்தி போன்ற பாகம் முன்னும் பின்னுமாகத் தள்ளப்பெறுதல் வேண்டும். ஆனால், கண்ணின் வில்லை பார்க்கப்பெறும் பொருளின் துரத்திற் கேற்றவாறு தானாக உடனுக்குடன் பொருத்தமுறுகின்றது. வில்லையைப் பற்றியுள்ள மணித்தசைகள் தளர்ந்து அதைத் தட்டையாகச் செய்தால் தொலைவிலுள்ள பொருள்களைக் காணலாம்; அத்தசைகள் சுருங்கி வில்லையைக் குவியச் செய்தால் அண்மைப் பொருள்கள் நன்கு துலக்கமுறும்.

பார்வைத் துடிப்புகள் மூளைக்குச் செல்லும் விதம் : ஒளியின் கோலம் கண்ணின் உணர்ச்சி மிகுந்த கொள்வாய் முடிவுப் பகுதிகளைத் துண்டும்பொழுது அங்கு வேதியியல் எதிர்வினை[1] தொடங்குகின்றது. இவ்வெதிர் வினை கண் . திரையினுள் நரம்பணுவுக்குக் கடத்தப்பெற்றுப் பார்வை நரம்பின்மூலம் மூளையை வந்தடைகின்றது. கண்.திரையின் ஒவ்வொரு கொள்வாயிலுமிருந்தும் மூளையின் பார்வைப் பகுதிக்கு ஒரு நரம்பு நார்த்தொகுதி செல்லுகின்றது. இப்பகுதி மூளையின் பின்புறத்தில் அமைந்துள்ளது. பார்க்கும் பொருளின் ஒவ்வொரு பகுதியும் காட்சிப் பாகத்தின் பரப்பில் வீசப்பெறுகின்றது. அஃதாவது, பொருளின் ஒவ்வொரு மையமும் அதற்கியைந்த வாறு கண்.திரைக் கொள்வாய்க்கு ஒளியை எதிரொளிக்கின்றது[2]. இத் துரண்டற் கோலம் நரம்பு நார்களால் மூளைக்கு


  1. 114வேதியியல் எதிர்வினை.-Chemical reaction.
  2. 115.எதிரொளி-Reflect. -