பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனிதனும் சூழ்நிலையும்

59


போகின்றது. கோல்கள் விளிம்பருகே மொய்த்துக் கொண்டுள்ளன; நடுவிடத்திற்குப் போகப் போகக் குறைந்து கொண்டே போய் இறுதியில் அவை இல்லாமற் போகின்றன. ஒவ்வொரு கண்.திரையிலும் 10,00,00,000 கோல்களும் 60,00,000 கூம்பு களும் உள்ளனவாகக் கணக்கிட்டுள்ளனர். இவ் வமைப்பினைக் கொண்டு கூம்புகளே நி ற த் தா ல் தாக்கப்பெறுகின்றன என்றும், கோல்களே வெளிற்றொளியால் தாக்கப்பெறுகின்றன என்றும் சிலர் முடிவு கட்டியுள்ளனர். நிறங்கள் பல வேறு பாட்டை அடைவது போலவே, கூம்புகளும் பலவாக வேறுபட்டு விளங்குகின்றன. பகற்காட்சி கூம்புகளால் நேர்கின்றதென்றும் ஒளி குறைந்த மாலைக் காட்சி கோல்களால் நேர்கின்ற தென்றும் வேறு சிலர் எடுத்துக் காட்டுகின்றனர்.

நிறக்குருடு: கண்ணின் முக்கியமான தொழில்களுள் ஒன்று நிறங்களைப் பிரித்தறிவதும் அவற்றைப் பார்ப்பதுமாகும். சாதாரணமான ஒரு சராசரி மனிதன் 3,00,000க்கு மேற்பட்ட நிறங்களைப் பிரித்தறியக் கூடும் என்று மதிப்பிட்டுள்ளனர். இதனால் ஒவ்வொரு நிறத்திற்கும் அவன் பெயரிடக் கூடும் என்பது பொருளன்று.

நம்மில் பெரும்பாலோர் எல்லா நிறங்களையும் அவற்றின் கலவைகளையும் பார்த்தறிதல் கூடும்; சிலரால் அங்ங்னம் காண இயலாது. அவர்கள் சில நிறங்களை மட்டிலும்தான் காணுதல் கூடும். பல நிறங்களை அவர்கள் பல நிலைகளிலுள்ள (Shades) வெளிற்றொளிகளாகவே காண்பர். இத்தகைய குறையை நிறக்குருடு[1]' என்று வழங்குவர். மக்கள் தொகையில் இருவித நிறக்குருடுகள் இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். சிலர் வெள்ளை.கறுப்புத்தொடர் நிறங்களையும் மஞ்சள். நீலம் தொடர் நிறங்களையும் காணக்கூடும்; ஆனால், அவர்கள் செம்மை-பச்சைத் தொடர் நிறங்களைக் காண இயலாது. இவர்களுக்குள்ள குறையை சிறிது-நிறக்குருடு'[2] என வழங்குவர். வேறு சிலர் வெண்மை.கருமைத் தொடர் நிறங்களை மட்டிலுமே காணவல்லவர்கள்; இவர்களுடைய குறை முழு நிறக்குருடு[3]' என வழங்கப்பெறும். சிறிது-நிறக்குரு டுடையோர் இருமை-நிறமுடையோர்'[4] என்றும், முழுநிறக்குரு டுடையோர் ஒருமை நிறமுடையோர்[5] என்றும் வழங்கப்


  1. 120.நிறக்குருடு -Colour blindness
  2. 121.சிறிது-நிறக்குருடு-Partial colour blindness.'
  3. 122.முழு நிறக்குருடு' -Total colour blindness.
  4. 123. இருமை நிறமுடையோர்.Dichromats
  5. 124. ஒருமை நிறமுடையோர்:Monochromats,