பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்வி உளவியல் கோட்பாடுகள்

80


பெறுவர். மக்கட்டொகையில் ஏறக்குறைய 4 சதவீதம் ஆண் பாலாரும், ஏறக்குறைய 1 சதவீதம் பெண்பாலாரும் இருமை. நிறமுடையவர்களாக உள்ளனர் என்று மதிப்பிடப் பெற்றுள்ளது. ஆயினும், ஒருமை.நிறமுடையோரின் எண்ணிக்கை மிகக் குறைந்தே காணப்பெறுகின்றது.

இன்றைய உலக வாழ்வில் நிறக்குருடைக் கண்டறிவது மிகவும் இன்றியமையாததாகின்றது. போக்குவரத்தில், நிற அடையாளங்கள் கையாளப் பெறுகின்றன. அச்சாளர், கோலம்புனைவோர், அமைப்பாளர், நெசவாளர் ஆகியோர் தம்தொழிலில் திறமை யடையவேண்டுமாயின் நல்ல நிறப் பார்வையைப் பெற்றிருத்தல் வேண்டும். நிறக்குருடைச் சோதித்தறிவதற்கு இன்று உளவியலார் ஆய்வுகளைக் கண்டறிந்துள்ளனர். அவற்றுள் பெருவழக்காக இருப்பது இஷிஹாரா ஆய்வு (Ishihara test) என்பது.

பார்வைக் குறைகள்: உளவியல் பயில்வோர் கட்புலனில் ஏற்படக் கூடிய உடற் கூறுபற்றிய பார்வைக் குறைகளை அறிந்து கொள்வது சாத்தியமில்லை. அது மருத்துவம் பயில் வோருக்குரிய தனிப்பட்ட துறையாகும். எனினும், சாதாரண மாக ஏற்படக் கூடிய பார்வைக் குறைகளைப் பற்றி ஓரளவு ஆசிரியர் அறிந்து கொள்ள வேண்டுவது மிகவும் இன்றியமை யாதது. கிட்டப்பார்வை'[1] என்பது சாதாரணமாகக் காணப் பெறும் ஒரு குறை. இது பிறவியிலேயே ஏற்பட்ட குறையன்று; பிறகு ஏற்படுவது, இந்தக் குறையை உடையவர்கள் அண்மை யிலுள்ள பொருள்களைத்தான் நன்கு பார்த்தல் இயலும்; சற்றுத் தொலைவிலுள்ள பொருள்கள் இவர்களுக்குத் தெளி வற்றனவாகவே காணப்படும். குழிவில்லை[2] : களைக் கொண்ட மூக்குக் கண்ணாடிகளை அணிந்து இக்குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம். தூரப்பார்வை'[3] என்பது மற்றொரு குறை. இது பிறவியிலேயே ஏற்படும் கோளாறு. இந்தக் குறை யுடையவர்கள் தொலைவிலுள்ள பொருள்களை நன்கு காண்பர்; அண்மையிலுள்ள பொருள்களை இவர்கள் நன்கு பார்த்தல் இயலாது. குவிவில்லை[4]களைக் .கொண்ட மூக்குக் கண்ணாடியை அணிந்து இக்குறையை நிவர்த்தி செய்து கொள்ளவேண்டும். குறைக் காட்சி [5]என்பது பிறவியிலேயே


  1. 125.கிட்டப்பார்வை-Short sight (Myopia).
  2. 126.குழிவில்லை-Concave lens.
  3. 27.தூரப்பார்வை-Long-sight (Hyperopia).
  4. 128.குவிவில்லை.Convex íens.
  5. 129. குறைக் காட்சி-Astigmatism.