பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதனும் சூழ்கிலையும் § {

ஏற்படும் பிறிதொரு குறை. படிகவில்லை அல்லது கருவிழி ஒழுங்கற்ற தன்மையில் அமைந்திருப்பதே இதற்குக் காரணம். இக்குறையை யுடையவர்கள் பொருள்களை ஒரளவு தெளி வுடனும் ஒரளவு தெளிவற்றும் காண்பர். உருளைவில்லை களைக் கொண்ட மூக்குக் கண்ணாடிகளை அணித்து இக் குறையைச் சமாளிக்க வேண்டும் இரட்டைப்பார்வை' என்பது இன்னொரு குறை பார்க்கப்படும் பொருளின் பிம்பம் கட்புலப்படாம் இரண்டிலும் ஒத்துள்ள புள்ளிகளில்' மையப் படுத்தப் பெறாததால் இது நேரிடுகின்றது. இதன் விளை வாக இரண்டு பிம்பங்கள் உண்டாகின்றன. இரட்டைப் பார்வை, நரம்புகளிலும் தசைகளிலும் ஏற்படும் நோய்நிலை களின் காரணமாகவும் நேரிடலாம்; மிதமிஞ்சிய குடியினாலும் பலவித நஞ்சுகளாலும் நோய்களாலும் ஏற்படலாம். நஞ்சு நீக்கு முறைகளாலும் பலவகைப்பட்ட தசைப் பயிற்சிகளாலும் இந்நிலையைக் குணமாக்கலாம். தக்க வில்லைகளைக் கொண்ட மூக்குக் கண்ணாடியை அணிந்தும் இதனைச் சமாளிக்க முடியும்.

கேள்விப்புலன்-காது

பார்வையைப் போலவே கேள்வியும் தொலைவிலுள்ள உள்துடிப்புகளை ஏற்பதால் நேரிடுகின்றது. பார்வையைப் போலவே கேள்வியும் நம்மைச் சுற்றியும் நிகழ்வதை அறிய உதவுகின்றது. இரண்டு புலன்களும் தொலைவிலுள்ள தூண்டல் களை மேற்கொள்வதால், இந்த இரண்டு புலன் உறுப்புகளும் தொலைவுப் புகுவாய்கள்' என வழங்கப்பெறும் பார்வை யைப்போல, செவிப்புலன் நாம் வாழ்வதற்கு அவ்வளவு அதிமுக்கியமாக இராவிடினும், கேள்வி புரிந்து கொள்வதற்கும் பாதுகாப்பிற்கும் ஒரு முக்கியமான சாதனமாக அமைந்துள்ளது. காட்சிப் புலனுக்கு ஒளியலைகள் தூண்டல்களாக அமைவன போலவே, கேள்விப்புலனுக்குத் துரண்டல்களாக அமைபவை காற்றுத்துணுக்குகளின்* அதிர்வுகளாகும் இந்த அதிர்வுகள் அலைவடிவில் நடைபெறுகின்றன. ஒர் அலையின் வீச்சுக்கும் 38 அதிர்வு-எண்ணுக்கும் ஏற்றவாறு முறையே ஒலியுணர்ச்சி

130, 2-(56) as 67& 6060. -Cylindrical lens.

131. gru-so-ti u Trfoloа-Double vision.

132. godigli sirom Ljarsifisair-Corresponding points.

133. Gomóðabójū LI&ffairliftoir-Distance receptors.

134. துணிக்குகள். Particles.

135, oftop&sir-Vibrations.

136. eléf3 - Amplitude.

137. goffa;-6T6%r-Frequency.