பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனிதனும் சூழ்நிலையும்

33


பிணைக்கின்றன. அவற்றின் உருவ அமைப்பினைக் கொண்டு அவை சுத்தி [1], பட்டடை,[2]'. அங்கவடிச் சிற்றெலும்புகள் 145.[3]என்று வழங்கப்பெறுகின்றன. இவற்றின் இணைப்பைப் படத்தில் காண்க. (படம் 15). இடைச் செவியின் உள் எல்லையாக உள்ள என்புச் சுவரில் இரண்டு துளைகள் உள்ளன. ஒன்று வட்ட வடிவினது; ஆதலின் அது வட்டப் புழை என்று வழங்கப்பெறும். மற்றொன்று முட்டை வடிவினது; ஆதலின் அது முட்டைப் புழை எனப் பெயர் பெறும். ஒவ்வொரு புழையையும் சவ்வு மூடிக்கிடக்

படம் 15 : செவியின் அமைப்பைக் காட்டுவது. மானிடச் செவியின் குறுக்கு வெட்டுத் தோற்றம்: 1._புறச்செவி, 2. புறச்செவியின்iன்று செல்லும் வ்ழி, 3. செவிப்பறை, 4. செவிப்பறையில் ஓடிக் கொண்டிருக்கும் சிற்றெலும்பு களின் பாலம்; 5. உட்செவியின் ஒரு பகுதியாகிய அரை விட்டக் குல்லியங்கள், 6. கடுச்செவியை வெளிக்காற் றுடன் இணைக்கும் செவிக்குழல்; 1. உட்செவியிலுள்ள - சுருள்வளை, 8. கேள்வி நரம்பு.

கின்றது. சுத்தி எலும்பின் கைப்பிடி செவிப்பறையிலும் அங்கவடி எலும்பின் பிறை வளைவின் இருமுனையும் முட்டைப் புழையின் சவ்விலும் ஒட்டிக் கிடக்கின்றன. வெளி ஒலியால் செவிப்பறை அசையுமானால் அதனோடு ஒட்டிள்ள என்புத் தொடரும் அசையும்; அவ்வென்புத்தொடர் அசையும்பொழுது முட்டைப்புழைச் சவ்வும் அசைகின்றது. இந்த நுட்பமான என்புகளை இணைக்கும் பந்தகங்கள் இறுகிப்போகுமாயின்

.


  1. 143சுத்தி - Hammer.
  2. 144.பட்டடை-Anvil
  3. சிற்றெலும்புகள் -Stirrup.