பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

கல்வி உளவியல் கோட்பாடுகள்


தெரிவிக்காமல் இருக்கலாம். இதன் விளைவு அவனைப் பள்ளி வேலையில் பிற்போக்காளனாக ஆக்கிவிடுகின்றது. ஆகவே, இத்தகைய மாணாக்கர்களை ஆசிரியர் உன்னிப்பாகக் கவனித்து ஆவன செய்யவேண்டும்.

பிற புலன்கள்

காட்சிப் புலன், கேள்விப் புலன் ஆகிய இரண்டனுடன் எத்தனைப் புலன்கள் நம்மிடம் அமைந்துள்ளன? அரிஸ்டாட்டில் காலத்திலிருந்து திருவள்ளுவர் காலத்திலிருந்து-மேலும் மூன்று புலன்கள் உள்ளன என்று சொல்லப்பெறுகின்றன. அவை: சுவைப் புலன், ஊற்றுப் புலன், நாற்றப் புலன் என்பன. எனினும், வழிவழியே கூறப்பெறும் சுவை ஒளி ஊறு ஒசை நாற்றம்' என்ற ஐந்தினுக்கு மேற்பட்ட புலன்களும் உள்ளன என்பது வெளிப்படை. அவை ஒவ்வொன்றையும் சிறிது ஆராய்வோம்.

வேதியியற் புலன்கள்

சுவைப்ப் புலனும் நாற்றப் புலனும் பயனிலும் செயற்படுவதிலும் மிக நெருங்கிய உறவு கொண்டுள்ளன. இந்த இரண்டிலும் பொருத்தமான தூண்டல்களால் வேதியியல் மாற்றங்கள் நிகழ் கின்றன. நடைமுறையில் இவை இரண்டும் இணைந்தே செயற் படுகின்றன என்பதை நாம் அறியலாம். சளி பிடித்திருக்கும் பொழுது நாம் உணவின் சுவையை உணராதது இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும். நாம் உண்ணும் உணவினைத் தேர்ந் தெடுப்பதற்கும், கேட்டினை விளைவிக்கும் பொருள்களை விலக்குவதற்கும் இவ்விரண்டும் ஒற்றுமையுடன் துணை புரிகின்றன. ஆகவே, இவை இரண்டையும் ஒன்றுபடுத்தி வேதியியற் புலன்கள்'[1] என வழங்கலாம். -

சுவைப்புலன்-நாக்கு: இப் புலனுக்குப் புகுவாயாக அமைந்தவை சுவையரும்புகள்'[2] என வழங்கும் உயிரணுக்களின் தொகுதியாகும். குழந்தைகளிடம் அதிகமான சுவையரும்புகள் உள்ளன. வயது ஆக ஆக, முதிர்ந்தவர்களிடம் புகுவாய்களின் எண்ணிக்கை பல நூறுகளிலிருந்து எழுபதிலிருந்து எண்பது வரை யிலுமாக குறைந்து விடுகின்றது. இவை நாலிலிருந்து பத்து வரை தொகுதிகளாக அமைந்துள்ளன. இவை நாவிலும்,


  1. 147.வேதியியற் புலன்கள்'-Chemical senses.
  2. 148.சுவையரும்புகள்-Taste buds.