பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனிதனும் சூழ்நிலையும்

69


பெருமான் வாக்கு வருதல் காண்க. இதற்குப் புகுவாயோ சில உயிரணுக்கள் ஆகும். அவை மூக்கினுள் அமைந்த ஈழைத்தோலில்

(சளிச் சவ்வு) பொதிந்துள்ளன (படம்.17). அவை - " கிட்டத்தட்டக் கண் மட்டத் தில் அமைந்துள்ளன. அமைப்பிலும் செயலிலும் இவை நாக்கிலுள்ள சுவையரும்புகளை ஒத்துள்ளன; வடிவில் வடிக் கதிர்போன்று விளங்குகின்றன, இவற்றின் மேற்பரப்பிலுள்ள அதிநுட்பம்மான உரோம அமைப்புகள் மனத்துடன் தொடர்பு கொள்ளுகின்றன.

உயிர்ப்பொருள்கள், உயிரல் பொருள்கள் எ ன் ப வ ற் றி - லிருந்து எழும் நுண்பொடிகள் படம் காற்றில் பரவுகின்றன. இக் - காற்றை நாம் உயிர்க்கும் பொழுது அது நம் முக்கினுட் புகுந்து உரோம அமைப்புகள் மூலம் ஈழைத் தோலில் புதைந்துள்ள உயிரணுக்களைத் தாக்கி வேதியியல் வினையைப் புரிகின்றன, அதனால் அவை கிளர்ச்சி யுறுகின்றன. இக் கிளர்ச்சி நரம்பு நார் வழியாக மூளையிலுள்ள நாற்றப் புல எல்லையை அடைகின்றது.

முகரும் பொறி சிக்கலின்றி இருந்தாலும் நாற்றப் புலனின் வகைகளோ பலவாகவே தோன்றுகின்றன. நிறவகை, ஒலிவகை முதலியவைபோல் நாற்றவகைகள் ஒற்றுமைப்பட்டுப் படிப்படியாக ஒரு தொடர்ச்சியாக விளங்கவில்லை. நாற்றப்புலன் மக்களிடையே சிறந்து விளங்காமையால் அதைப்பற்றி ஆராய் வோரும் அதன் வேற்றுமைகளை வகை செய்து இதுவரை முடிவு கட்டவில்லை. புதுப்புது மருந்துகளும், புதுப்புதுப் பழங்களும் புதுப்புதுப் பூக்களும் புதுப்புது மணத்தைத் தெரிவிக்கின்றன.

ஊற்றுப்புலன்-தோல்

புற உலகைத் தெரிந்து கொள்வதற்கு ஊற்றுப்புலன்கள்:[1]இன்றியமையாத மற்றொரு மூலம் ஆகின்றது. தேவைப்படுங் கால், இவை பார்வைப் புலனுக்குப் பதிலாகத் திறனுள்ள உறுப்பு-


  1. 150,ஊற்றுப்புலன்கள்: -Cutaneous or tactual sensation.